நோய் வந்தால் “நொந்து’ போக வேண்டும்: ரோடு இல்லாத பொந்தம்புளியில் அவஸ்தை

Vinkmag ad

ponthampuliமுதுகுளத்தூர்: ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே பொந்தம்புளி கிராமத்திற்கு ரோடு வசதி இல்லாததால், சிகிச்சைக்காக நோயாளிகளை, 5 கி.மீ., கட்டிலில் தூக்கி செல்லும் பரிதாபம் தொடர்கிறது.

130 குடும்பங்கள் வாழும் பொந்தம்புளி கிராமத்திற்கு, ரோடு வசதி கிடையாது. வயல் வழியாக 10 கி.மீ., தூரம் எட்டிசேரி வரை நடந்து சென்று, மேல்நிலை கல்விக்காக 80 மாணவர்களும், பிற தொழில்களுக்காக, 200 பேரும் தினமும் பஸ்சில் முதுகுளத்தூர் செல்கின்றனர். வாகனங்களில் செல்வோரும், சித்திரங்குடி கண்மாய் கரை, சித்திரங்குடி வழியாக, 5 கி.மீ., தூரத்தில் உள்ள முதுகுளத்தூர் விலக்கு ரோடு வரை வயல்வழியாக கரடு, முரடான பாதையில் செல்லும் அவலம் தொடர்கிறது. மழை பெய்தால் வெளியூர் செல்வது தடைபடுகிறது. நோயாளிகளை சிகிச்சைக்காக கட்டிலில் தூக்கி கொண்டு 5 கி.மீ., வரை வயல்வெளியில் நடந்து செல்லவேண்டி உள்ளது. அங்கிருந்து முதுகுளத்தூர் அரசு மருத்துவமனைக்கு வாகனம் கிடைக்காமல் அவதிப்படுவதும் தொடர்கிறது.
கிராம மக்களின் குமுறல்:
ராஜசேகர்: விவசாய நிலங்களில், 10 கி.மீ., தூரம் நடந்து சென்று மேல்நிலை கல்வி படிக்கும் கட்டாயத்தால், மாற்றுத்திறனாளிகள் படிக்க முடியவில்லை. வரப்புகளில் நடந்து செல்லும்போது, விஷ ஜந்துக்கடி, சகதிக்கு மாணவர்கள் அச்சமடைகின்றனர். சிலர் பள்ளிக்கு செல்வதை தவிர்க்கின்றனர்.
சரஸ்வதி: இரண்டு நாட்களில் இருவருக்கு உடல்நல குறைவு ஏற்பட்டது. நடந்து செல்லும்போது வழுக்கி விழும் அபாயம் இருப்பதால், மேல்சிகிச்சைக்கு கூட பாதிக்கபட்டோரை தூக்கி செல்வது சிரமமாக உள்ளது. ரோடு, குடிநீர், மின்சார வசதிகளுக்காக ஏங்குகிறோம்.
யோபு: ரோடு இல்லாததால் வாகனங்கள் இருந்தும் பெரும்பாலும் பயன்படுத்துவதில்லை. அவசரத்திற்கு வாகனங்களில் சென்றாலும், வெளியூர்களில் நிறுத்திவிட்டு, நடந்தே வீடு திரும்புகிறோம். ரோடு வசதி கோரி, பலரிடம் முறையிட்டும் பலனில்லை. முதுகுளத்தூர் எம்.எல்.ஏ., முருகனை தொடர்பு கொண்ட போது, “”உடல்நலக்குறைவால் சென்னையில் சிகிச்சை பெற்று வருகிறார், என்றார் அவரது உதவியாளர்.
கடலாடி ஊராட்சி ஒன்றிய கமிஷனர் குருநாதன் கூறுகையில், “”மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று, ரோடு அமைக்க துரித நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றார்.

 

News

Read Previous

குளம்போல் தேங்கும் மழைநீர்பஸ்கள் செல்வதில் சிக்கல்

Read Next

கார் விபத்தில் அதிமுக பிரமுகர் படுகாயம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *