குளம்போல் தேங்கும் மழைநீர்பஸ்கள் செல்வதில் சிக்கல்

Vinkmag ad

முதுகுளத்தூர்: முதுகுளத்தூர் பஸ் ஸ்டாண்டில், குளம்போல் தேங்கும் மழைநீரால்,

பஸ்கள் வந்து செல்வதில் சிக்கல் ஏற்படுகிறது. முதுகுளத்தூர் பஜாரில் மழை பெய்தால், தண்ணீர் வெளியேற முடியாமல், வாய்க்கால் வழியாக கழிவுநீரோடு முதுகுளத்தூர் பஸ் ஸ்டாண்டில் தேங்குகிறது. வேகமாக பஸ்கள் செல்லும் போது, கழிவுநீர் கலந்த தண்ணீர் அபிஷேகத்தால் பயணிகள் எரிச்சல்அடைகின்றனர்.
இளஞ்செம்பூர் உமையலிங்கம் கூறும்போது: மழைநீரோடு கழிவுநீரும் கலந்து, பஸ் ஸ்டாண்ட் வளாகத்தை துர்நாற்றம் சூழ்ந்து, பயணிகள், வியாபாரிகளை அவதிப்பட வைத்துள்ளது. வாய்க்கால் அமைக்க பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும், என்றார்.பேரூராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், “”கழிவுநீர், மழைநீர் வெளியேறும் வகையில் அமைக்கபட்ட வாய்க்கால்கள், பஜார்களிலுள்ள கடைகாரர்களால் ஆக்கிரமிக்கபட்டு, சேதபடுத்தபட்டு உள்ளது. ஆக்கிரமிப்புகளை அகற்ற, விரைவில் நடவடிக்கை எடுக்கபடும்,” என்றார்.

News

Read Previous

சர்க்கரை நோயாளிகளுக்கு இனிப்பான செய்தி. 5 ரூபாயில் இனி சுயமாக டெஸ்ட் செய்யலாம்

Read Next

நோய் வந்தால் “நொந்து’ போக வேண்டும்: ரோடு இல்லாத பொந்தம்புளியில் அவஸ்தை

Leave a Reply

Your email address will not be published.