சர்க்கரை நோயாளிகளுக்கு இனிப்பான செய்தி. 5 ரூபாயில் இனி சுயமாக டெஸ்ட் செய்யலாம்

Vinkmag ad

சென்னை: நீரிழிவு நோயாளிகள் சுயமாக ரத்த சர்க்கரை பரிசோதனை செல்வதற்கான பட்டை இனி 3 முதல் 5 ரூபாய்க்கு கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் தெரிவித்துள்ளது. டிசம்பர் மாத இறுதிக்குள் இந்த மருந்துப் பட்டைகள் மக்களுக்குக் கிடைக்கும் என மத்திய அரசின் சுகாதார ஆராய்ச்சி செயலாளர் வி.எம்.கடோச் கூறியுள்ளார்.

இதன்மூலம் நீரிழிவினால் பாதிக்கப்பட்ட ஏழை, எளிய மக்களும் இனி சுயமாக எளிதில் ரத்தப் பரிசோதனை செய்து கொள்ளலாம் நீரிழிவு நோயாளிகள் தங்கள் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை அவர்களாவே சுய பரிசோதனை மூலம் அறிந்து கொள்வது வழக்கம். இதற்கு பரிசோதனைக் கருவியில் செலுத்தப் பயன்படும் ஸ்டிரிப்புகள் ரூ.30 முதல் ரூ.35 வரை பல்வேறு தனியார் நிறுவனங்கள் தயாரித்து விற்பனை செய்கின்றனர்.

இது பணக்காரர்களுக்கு மட்டுமே உரியதானதாக உள்ளது. இனி ஏழை, நடுத்தர மக்களும் எளிதாக இவற்றை வாங்கி பரிசோதனை செய்து கொள்ளும் வகையில் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் புதிய ஸ்டிரிப்புகளை கண்டுபிடித்துள்ளது. இதன் விலை 3 ரூபாய் முதல் 5ரூபாய்க்குள் கிடைக்கும்

News

Read Previous

ரோடு மராமத்து பணியால் குழாய் சேதம் 6 மாதங்களாக குடிநீர் இன்றி தவிப்பு

Read Next

குளம்போல் தேங்கும் மழைநீர்பஸ்கள் செல்வதில் சிக்கல்

Leave a Reply

Your email address will not be published.