1. Home
  2. வித்யாசாகர்

Tag: வித்யாசாகர்

எங்கே போகிறேன் நான்.. ?

எங்கே போகிறேன் நான்.. ? (கவிதை) வித்யாசாகர்!   அதொரு கடலழிக்கும் காடு காடெங்கும் தேவதைகள் கடல்மறிக்கும் தேவர்கள் தேவர்களின் காலடியில் தேவதை பெற்றுப்போட்ட மிருகம் நான்; வானெங்கும் நட்சத்திரம் காடெங்கும் கர்ஜிக்கும் மிருகம் வான்முட்டும் கட்டிடத்தின் கீழேயும் மேலேயும் எங்கோ ஒருசிலராய் வாழும் கருப்பு வெள்ளை மனிதர்கள்..…

படித்தால் பெரியாளாகி விடுவாய் – சிந்தனை களம் – வித்யாசாகர்

படித்தால் பெரியாளாகி விடுவாய் – சிந்தனை களம் – வித்யாசாகர்   ஒரு நூலகம் கட்டுதல் என்பது காடமைப்பதற்கு சமம். காடு தோறும் வளர்ந்த மரங்களைப்போல் நூலகம் நிறைந்தப் புத்தகங்கள் ஒவ்வொன்றும் ஆயிரமாயிரம் சிந்தனையின் விதைகளைத் தாங்கிக் கொண்டுள்ளதை படிக்கப் படிக்கவே உணரமுடியும். படித்தலில் கிடைக்கும் அறிவு சாதுர்யம்…

உறவின் பெருமை

உறவின் பெருமை (வித்யாசாகர்) வாழ்வியல் கட்டுரை..   கைகளிரண்டும் உடைந்திருக்கையில் பறக்க இரு சிறகு கிடைத்ததற்குச் சமமானது உறவினர்உடனிருப்பது. மேலானதும் போதாதுமாய் இருக்குமந்த உறவுகள்; இருக்கிறார்கள் என்பதே பலம். சிரிக்கையில் சிரிக்கவும் அழுகையில் துடைக்கவும் உடனிருக்கும் உறவுகளின் கைகள் மகத்தானது. கசங்கிப்போன மலர்களின் வாசம்போல உதவிக்கில்லாதபோதும் உறவுகள் இருக்கிறார்கள் என்பது இனிக்கவே செய்கிறது. முரசடிக்கும் கைகள்ஓய்ந்து போனாலும்…

நினைவுக் கனலிலெரியும் முகநூல் இதயம்..

நினைவுக் கனலிலெரியும் முகநூல் இதயம்.. (காதல் கவிதை) வித்யாசாகர்! 1 நீ – காற்றில் அசைபவள் கிளையுரசி உடைபவள் விழுந்ததும் பறப்பவள் பயணித்துக் கொண்டேயிருப்பவள்; நான் நின்று நீ வருவதையும் போவதையுமே பார்த்திருக்கிறேன்; கணினி வழி தெரியும் கண்களிலேயே உயிர்திருக்கிறேன்; வாழ்வதை அசைபோட்ட படி உன்னையும் நினைத்துச் சிரித்திருக்கிறேன்; வாசலை…

தன்னை தான் உணர்வதே ஞானம்..

தன்னை தான் உணர்வதே ஞானம்.. (கவிதை) வித்யாசாகர்!   முதுகெலும்புகள் நிமிர்ந்திருந்தும் முடிவுகளால் தளர்ந்தவர்கள், நினைத்ததைச் சாதித்தும் நடக்காததில் நோகும் பிறப்புகள்; ஏக்கப் பெருமூச்சினுள் வெந்துவெந்தே நித்தம் வாழ்பவர்கள், என்றேனும் மாறும் வாழ்க்கைக்கு என்றென்றும் கனாக்காணும்; ஈசல் பூச்சிகள்; வந்தவர் போனவர் பற்றியெல்லாம் பகடி பேசும் பழையப் போர்வாள்கள்;…

வலிக்கச் சுடும் மழைக்காலம்..

வலிக்கச் சுடும் மழைக்காலம்.. (கவிதை) வித்யாசாகர்! மழைக்காலம் மரணத்தின் வாசம் மணற்தடமெங்கும் மரக்கட்டை சாபம்; மழைக்காலம் மரண ஓலம் குளங்குட்டை தோறும் தவளைகள் ஏலம்; மழைக்காலம் பூக்களெல்லாம் பாவம் உதிர்ந்து நனைந்து உயிரோடு சாகும்; மழைக்காலம் மின்கம்பி அறும் மின்வெட்டிற்கு முன்பாக காகத்தின் சிறகெரியும்; மழைக்காலம் துண்டுதுண்டாய்ப் போகும்…

கவனிக்கவேண்டிய காருண்யம்..

கவனிக்கவேண்டிய காருண்யம்.. (கவிதை) வித்யாசாகர்! 1 கொசு பாவம் பசிக்குத்தான் ரத்தம் குடிக்கிறது; நாம்தான் கொலைக்காரர்கள் வலிக்கு பதிலாக – கொசுவையே கொன்றுவிடுகிறோம். கொசு அதன் இயல்பில் அது சரி; எனில்  – நாம்? —————————————————— 2 இடத்தை சுத்தம் செய்வதாக நினைத்து வெட்டிய மரங்களில்லா இடத்தில் எத்தனை…

பாவம் பொடிபட மனிதம் புரிபடும்.. (கவிதை) வித்யாசாகர்!

ஓடும் எறும்பு நசுங்கிப்போகும் தின்ற மீனின் உடம்புநோகும் வெட்டும் சதையில் பாவம் வடியும் அது வாழ்வெங்கும் கூட வரும்; பார்க்கச் சிரிக்கும் பெண்ணும் பாரம் சிரிக்க ஏங்கும் ஆணும் பாரம் உறவு புரியா மனதிற்குள்ளே ஆயிரம் பூதம் கனமே சேரும்; திட்ட கூட மனசு சாகும் வார்த்தை அடியில்…

குவைத் பற்றிய தொடர் கட்டுரை (1) — வித்யாசாகர்

வாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (குவைத்) சாதாரண மனிதரின் கனவுகளுக்கும் கைகால் முளைக்கவைத்து வாழ்க்கையை வண்ணமாக்கிவிட்ட உலகநாடுகளுக்கு மத்தியில் தன்னை முதலிடத்திலேயே வைத்திருக்கும் மத்தியக் கிழக்கு நாடுகளுள் குவைத்தும் முதலான ஒரு நாடு என்றால்; அங்கே வந்து தனது வாழ்க்கையை விதைத்துக் கொண்டோரால் அதை மறுக்கமுடிவதில்லைதான்.. கலர் டிவியில் ஆரம்பித்த…

அம்மா தொட்டுப்பார்த்த வயிறும்; அதில் நானும்.. (அம்மா கவிதை) வித்யாசாகர்!

அவள் எனை கர்ப்பத்தில் சுமக்கையில் இருந்த அவளுடைய ஆசைகளாகவே அவளை நான் பார்க்கிறேன்; அவள் கனவுகளை எனக்காகச் சுமந்தவள் வலிக்கும்போதேல்லாம் எனக்காகத் தாங்கிக் கொண்டவள் வயிற்றைத் தொட்டுத் தொட்டு எனைப் பார்த்த அவளுடைய கைகள் பூஜையரையைவிட மேலான எனது பெரிய மனதுள் பத்திர நினைவாகவே வைக்கப்பட்டுள்ளது. அம்மா; எனது…