1. Home
  2. வித்யாசாகர்

Tag: வித்யாசாகர்

இன்றும் வேண்டும் அது..

இன்றும் வேண்டும் அது… (சந்தவசந்த கவியரங்கத்துக் கவிதை) வித்யாசாகர்   பசிக்கு உணவு செய்த மானத்திற்கு  ஆடை நெய்த வாழ்விற்கு நீதி போதித்த மானுடம் இன்றும் பேசிவரும் சாகா தமிழுக்கு வணக்கம்.. —————————————————————————— காற்றடித்துக் கலைந்துப் போன கோலம்போல வாக்களித்து நொடிந்துப் போகும்மனிதர்போல தீர்ப்பெழுதி நீதி குலைக்கும் மேலோர்;…

கருப்பென்பது உயிரின் நிறம்

கருப்பென்பது உயிரின் நிறம் – (கவிதை) வித்யாசாகர் ​ கருப்பென்ன கருப்பா..? ச்சீ அது வெள்ளையென்று நம்பவைத்தவள் நீ.. என் கருப்பிற்கு உன் புன்னகையால் நட்சத்திரப் பொட்டுவைத்தவள் நீ.. ரசித்து ரசித்தே எனது கருப்பை கண்களால் துடைத்துவிட்டவள்.. காற்றிடையே பேசிக்கொண்ட மனதை கருப்புதாண்டி கண்டுக்கொண்டவள்.. எனக்குக் கற்பென்பது கருப்பென்று…

இன்றையச் செய்திகள்..

இன்றையச் செய்திகள்.. (கவிதை) வித்யாசாகர் ​ கள்ளச்சாராயம் அறுபத்தினாலு பேர் கள்ளச்சாராயம் குடித்து மரணம்; அறுபத்தினாலு குடும்பங்களின் அழுகைக்கு தீர்வில்லா நம் கொடூர மௌனம்.. எதற்கும் வருத்தமின்றி திறந்திருக்கும் டாஸ்மாக்; பலரின் கொள்ளிக்கு முன்பே முதல் தீயிட்ட அரசு.. குடிக்க விற்றுவிட்டு குடிப்பதைத் தடுக்கமுடியா அவலம்; குடியினால் குடி…

யாதுமாகிய அவள்.

யாதுமாகிய அவள்.. (கவிதை) வித்யாசாகர்!   1 சிக்னலில் நிற்கும் அவசரத்திலும் மனசு தனித்து நிற்கிறது அவளிடம்.. —————————————————————- 2 பூவா தலையா போட்டுப்பார்கிறேன் இரண்டிலுமே அவள் முகம்தான் தெரிகிறது.. —————————————————————- 3 மல்லிகைப்பூ தான் விற்கிறார்கள் தெருவில் ஆனால் ஏனோ எனக்கு அவள் வாசமே வருகிறது.. —————————————————————-…

மரணத்தை விழுங்கும் ரகசியம்.. (கவிதை) வித்யாசாகர்

மரணத்தை விழுங்கும் ரகசியம்.. (கவிதை) வித்யாசாகர் ​ 1, சிரிப்பழிவதைக் காட்டிலும் ஒரு கொடூர வலியில்லை.., கூடஇருந்து சிரிப்பவர் நடப்பவர் உடன் நகமும் சதையுமாய் வாழ்ந்தவர் இறப்பதைக்காட்டிலும் தன் மரணமொன்றும் தனக்குப் பெரிதாக வலித்துவிடப் போவதில்லை.., போனவரை போனவராக விட்டுவிட இயலாததொரு நினைவு எரிக்கும் நடைபிண வாழ்க்கையே நம்…

தேனீர் கடைக்கு வா இதயம் தருகிறேன்

தேனீர் கடைக்கு வா இதயம் தருகிறேன்.. (கவிதை) வித்யாசாகர் 1) நம் தெருமுனை தேனீர் கடையோரம் அமர்ந்திருப்போம், என் கடையில் தேனீர் அருந்தாமல் இவனுக்கு பொழுதே விடியாதென்பார் கடைக்காரர், உனக்குத்தானே தெரியும் உன்னை காணாதெனக்கு விடியாது பொழுதென்று.. ————————————————————– 2) அரை குடம் தண்ணி பிடிக்கவா அடிக்கடி வந்தாய்…

நினைத்தாலே இனிப்பவள் நீ..

நினைத்தாலே இனிப்பவள் நீ.. (கவிதை) வித்யாசாகர்   1 உனக்குத் தெரியுமா எனக்கு இப்போதெல்லாம் போதை நிறைய ஏறிக் கிடக்கிறது வெறும் நீயெனும் போதை.. ———————————————————————— 2 உனக்குத் தூக்கத்தில் வரும் கனவும் எனக்கு வரும் கனவும் ஒன்று தான்; நீ எனக்குச் சொல்லாததும் நானுனக்குச் சொல்லாததும் அது..…

உயிர்மூழ்கிய மழைவெள்ளம்.

உயிர்மூழ்கிய மழைவெள்ளம்.. (கவிதை) வித்யாசாகர்!   1 விடு விடு மதமாவது சாதியாவது மண்ணாவது; போவது உயிரெனில் யாராயினும் தடு; உயிர்த்திருத்தல் வலிது.. ———————————————————————— 2 ஐயோ சுனாமி நிலநடுக்கம் புயல் மழை வெள்ளம் மரணம் மரணம் கத்தாதே, ஏதேனும் செய்!! ———————————————————————— 3 ஒருவேளை பட்டினி மரணத்தைவிட…

இது உனக்கானது..

இது உனக்கானது.. (கவிதை) வித்யாசாகர் நீ தான் நீதான் எனக்குள் இத்தனைப் பெரிதாக இருக்கிறாய்.. உனக்காக மட்டும்தான் என் இதயம் நினைவின் கனத்தோடு துடிக்கிறது.. ஒரு தொடுதல் ஒரு பார்வையில் நீ மட்டுமே உள்ளே கனவாக விரிகிறாய்.. நிலம் சொந்தம் நீர் சொந்தம் வானமும் வானத்திற்கப்பாற்பட்ட அனைத்துமென நித்தம்…

கல் நட்டோரே; கவிதைக்கு ஒன்றும் நடுங்களேன்.. (கவிதை) வித்யாசாகர்

அம்மாவை காணாதப் பிள்ளையி னழுகை அணைத்து முத்தமிட்டவளின் பிரிவு இழுத்துக் கட்டிக்கொள்ளும் தோழமை இனி இல்லாது போனவரின் மரணம் இப்படிச் சொல்லாமல் விடுபட்ட – கவிதையினுள் நிகழ்கிறது எனக்கான தற்கொலை.. எட்டிப் பார்த்த முகம்போல எழுத்து நேரில் நின்றிருந்தும் – ஏனென்றுக் கேட்டிடாத தவிப்பு உறவின் பகையிலழும் சிறுபிள்ளையின்…