1. Home
  2. உலகம்

Category: உலகம்

அமெரிக்கப் பன்மைத்தன்மையின் வெற்றி!

அமெரிக்கப் பன்மைத்தன்மையின் வெற்றி! இந்தியர்கள், குறிப்பாகத் தமிழர்கள் வெளிநாடுகளில் சாதனைகளை நிகழ்த்தும்போதோ, உயர்ந்த அந்தஸ்துக்கு அவர்கள் வரும்போதோ இயல்பாகவே பெருமிதம் அடைகிறோம். இந்திரா நூயி, சுந்தர் பிச்சை போன்றோரை எடுத்துக்காட்டலாம். அமெரிக்காவின் ஜனநாயகக் கட்சியின் துணை அதிபர் வேட்பாளராக இந்திய-ஆப்பிரிக்க வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸை அறிவித்த பிறகு தமிழகத்திலும் இந்தியாவிலும் உலகெங்கும் அதிகம் உச்சரிக்கப்படும் பெயர்களுள் ஒன்றாக கமலா ஹாரிஸ் ஆகிப்போனது. 2020 அவருக்கு வேறு பல செய்திகளை வைத்திருந்தது. கரோனா பெருந்தொற்றை ட்ரம்ப் எதிர்கொள்ளும் விதத்தை கமலா  ஹாரிஸ் கடுமையாக விமர்சித்தார். கறுப்பினத்தவரான ஜார்ஜ் ஃப்ளாய்ட் காவல் துறையினரால் கொல்லப்பட்டது கமலா ஹாரிஸுக்குக் கூடுதல் விசையை அளித்தது. சற்றே இனவாதக் கருத்துகள் கொண்ட ஜோ பிடன் கறுப்பினத்தோர், புலம்பெயர்ந்தோர்களைத் தனது வாக்கு வட்டத்துக்குள் ஈர்க்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. ஜோ பிடனின் அரசியல் கணக்குகளுக்கு கமலா ஹாரிஸ் பொருந்திவந்தார். அமெரிக்கச் சரித்திரத்தில் ஒரு பெருங்கட்சியின் முதல் ஆப்பிரிக்க-அமெரிக்க, முதல் இந்திய-அமெரிக்கத் துணை அதிபர் வேட்பாளர் என்று பல முதல்களுக்கு கமலா ஹாரிஸ் சொந்தமாகியிருக்கிறார். இந்த இணை வெற்றிபெற்றால் இன்னும் பல முதன்மைகளுக்கு கமலா ஹாரிஸ் சொந்தக்காரர் ஆவார். கமலா ஹாரிஸின் துணை அதிபர் தேர்வு என்பது அமெரிக்கா தன் உயிர்நாடியாகக் கொண்டுள்ள பன்மைத்தன்மையின் பிரதிபலிப்பு. கமலா ஹாரிஸ் துணை அதிபர் வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்து பூரித்துப்போயிருக்கும் இந்தியர்கள் பலரும் சோனியா காந்தி குறித்து என்ன கருத்து கொண்டிருந்தனர் என்றும், அவர் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்படும் வாய்ப்பு இருந்தபோது எத்தகைய எதிர்வினைகளை ஆற்றினார்கள் என்பதையும் யோசித்துப்பார்க்க வேண்டும். கமலா ஹாரிஸை ‘வந்தேறி’ அடையாளம் சூட்டி விலக்கிவைக்காமல் தனது இனவெறி வரலாற்றின் பாவக் கறையைக் கழுவக் கிடைத்த மற்றொரு வாய்ப்பாக (முதல் வாய்ப்பு ஒபாமா) அமெரிக்கா கருதுகிறது. உலகின் மூத்த ஜனநாயகம் இவ்வாறாக உலகுக்கே வழிகாட்டுகிறது. – நன்றி : ஆகஸ்ட் 17 தமிழ் இந்துவில் ஆசை எழுதிய கட்டுரையிலிருந்து..

கிளர்ச்சிக்கு வரலாறு படைத்த கியூபா

கிளர்ச்சிக்கு   வரலாறு படைத்த      கியூபா பொன் குலேந்திரன்  ( கனடா) கியூபாவுக்கு தமிழ் முதியவர்களை  ஒன்றாறியோவில்  இருந்து கோடை காலத்தில்  அழைத்துக் கொண்டுபோவதற்கு   என்று சங்கத்தின் செயற் குழு  முடிவெடுத்தவுடன் கனடாவில் புருவத்தை உயர்த்தியவர்கள்  பலர் . அதுக்கு முக்கிய  காரணம் , சில வட…

தொடரும் உயிரிழப்பு…. அதிர்ச்சியில் அமெரிக்கா

தொடரும் உயிரிழப்பு…. அதிர்ச்சியில் அமெரிக்கா அமெரிக்காவில் கொரானா பாதிப்பினால் நேற்று ஒரே நாளில் 143 பேர் பலியானதைத் தொடர்ந்து அங்கு  உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 700ஐ நெருங்கியுள்ளது. உலகின் 197 நாடுகளில் பரவியுள்ள கொரோனா வைரசால் 18 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் ஏற்கனவே 43 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டிருந்த…

2022 ஆண்டு இந்தியர் மூவர் இயக்கும் விண்கப்பல் பயணத்துக்கு நான்கு விமானிகள் ரஷ்யாவில் பயிற்சி

2022 ஆண்டு இந்தியர் மூவர் இயக்கும் விண்கப்பல் பயணத்துக்கு நான்கு விமானிகள் ரஷ்யாவில் பயிற்சி சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா     +++++++++++++   நிலவைச் சுற்றிய முதல் சந்திரயான் உளவிச் சென்று நாசா துணைக்கோளுடன் தென் துருவத்தில் ஒளிமறைவுக் குழியில் பனிப் படிவைக் கண்டது…

வஃபாத்து செய்தி

வபாத்து செய்தி ****** சிங்கப்பூர் டன்லப் ஸ்திரிட்டிலுள்ள #சங்கம் டெக்ஸ்டைல்ஸ் & நாணய மாற்று நிறுவனத்தின் அதிபரும், சிங்கப்பூரில் வெளிவரும் செம்மொழி மாத இதழின் ஆசிரியருமான திரு எம்.இலியாஸ் அவர்களின் ஆருயிர் தந்தை ஹாஜி #A_முஹம்மது_யாசீன் அவர்கள் (01.01.2020 புதன்) சற்று நேரத்திற்கு முன்னர் உடல் நலக்குறைவால் #சிங்கப்பூரில்…

தமிழக மீனவர்கள் தாக்கப்படும் விவகாரம் : இலங்கை அமைச்சர்களுடன் கே . நவாஸ் கனி எம்.பி., கவிஞர் கனிமொழி எம்.பி., பேச்சுவார்த்தை

தமிழக மீனவர்கள் தாக்கப்படும் விவகாரம் : தேர்தல் வாக்குறுதி நிறைவேற்ற இலங்கை அமைச்சர்களுடன் கே . நவாஸ் கனி எம்.பி., கவிஞர் கனிமொழி எம்.பி., பேச்சுவார்த்தை தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது குறித்து சுமுக தீர்வு ஏற்படுத்தும் விதமாக, இலங்கை அமைச்சர்களுடன், திமுக எம்.பி. கனிமொழி மற்றும் இ.யூ.முஸ்லிம் லீக்…

மலேசியாவில் முனைவர் மு. இளங்கோவனின் தொல்லிசையும் கல்லிசையும் நூல் வெளியீட்டு விழா!

மலேசியாவில் முனைவர் மு. இளங்கோவனின் தொல்லிசையும் கல்லிசையும் நூல் வெளியீட்டு விழா!   புதுவைப் பேராசிரியர் முனைவர் மு. இளங்கோவன் எழுதிய தொல்லிசையும் கல்லிசையும் என்ற நூலின் வெளியீட்டு விழா, கோலாலம்பூரில் அமைந்துள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இந்தியக் கலாச்சார மையத்தின் ஆதரவுடன், தமிழ்ப் பெருமக்கள் செறிந்து வாழும்…

மலேசியாவில் தமிழர்கள் கட்டிய அழகிய பள்ளிவாசல்!

மலேசியாவில் தமிழர்கள் கட்டிய அழகிய பள்ளிவாசல்! ( மு.தமிமுன் அன்சாரி MLA அவர்களின் பயண இலக்கிய பதிவு) கடல் வணிகத்தில் கொடி கட்டி பறந்த சமூகம் ஒன்றின் வரலாற்று செய்தி இது. தமிழகத்தின் காவிரி டெல்டா மாவட்ட முஸ்லிம்கள், தாங்கள் பயணித்த இடங்களில் எல்லாம் தமிழை வளர்த்தனர். அத்துடன்…

சிங்கப்பூரில் இந்தியாவுக்கு வெளியே இந்தியர்கள் நடத்தும் மாபெரும் இஃப்தார் நிகழ்வு!

சிங்கப்பூரில் இந்தியாவுக்கு வெளியே இந்தியர்கள் நடத்தும் மாபெரும் இஃப்தார் நிகழ்வு! (மு.தமிமுன் அன்சாரி MLA அவர்களின் பயண இலக்கிய பதிவு) உலகின் வளம் வாய்ந்த தீவு தேசமாக திகழ்கிறது சிங்கப்பூர் . ஒரு மீன் பிடி பிரதேசமாகவும், சதுப்பு நில பூமியாகவும் இருந்த தீவை, உலகம் மதிக்கும் பொருளாதார…

இன்று உலக இட்லி தினம்

இன்று உலக இட்லி தினம்.. இட்லி சாப்பிட்டா உடம்புக்கு நல்லது.. ஓட்டு போட்டா நாட்டுக்கு நல்லது..! குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவது இட்லி. இது ரவா இட்லி, குஷ்பு இட்லி, டம்ளர் இட்லி, காஞ்சிபுரம் இட்லி, தட்டு இட்லி, கிண்ண இட்லி என பல…