இன்று உலக இட்லி தினம்

Vinkmag ad

இன்று உலக இட்லி தினம்.. இட்லி சாப்பிட்டா உடம்புக்கு நல்லது.. ஓட்டு போட்டா நாட்டுக்கு நல்லது..!
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவது இட்லி. இது ரவா இட்லி, குஷ்பு இட்லி, டம்ளர் இட்லி, காஞ்சிபுரம் இட்லி, தட்டு இட்லி, கிண்ண இட்லி என பல வகையில் செய்யப்பட்டு வந்தது.

இந்த நிலையில் தமிழ்நாடு உணவு தயாரிப்பு ஊழியர்கள் சங்கத்தின் தலைவர் ராஜாமணி அய்யர், இட்லி தினத்தை கொண்டாடும் திட்டத்தை யோசித்தார். அதன்படி ஆண்டுதோறும் மார்ச் 30-ஆம் தேதி இட்லி தினம் கொண்டாடப்படுகிறது.

ஆண்டுதோறும் விதவிதமாக இட்லிகள் தயார் செய்யப்பட்டு கண்காட்சி போல் வைக்கப்படும். அதன்படி சென்னை காசிமேட்டில் உள்ள மீனவர் பகுதிகளில் மிகவும் பிரதானமாக உண்ணப்படும் உணவு இட்லியாகும். இங்கு கோவையைச் சேர்ந்த ஆட்டோ டிரைவரான இனியவன் என்பவர் விதவிதமான இட்லிகளை தயார் செய்து காட்சிப்படுத்தியுள்ளார்.

இந்த இட்லியை வைத்து இட்லி தினத்தை கொண்டாடும் வகையிலும் விரும்பிய மக்கள், வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு விதமான இட்லிகளை தயார் செய்யப்பட்டுள்ளது. கடந்த 2013-இல் இனியவன் என்பவர் 128 கிலோ எடை கொண்ட இட்லியை தயாரித்து கின்னஸ் சாதனை படைத்தார்.

அதன்படி வாக்குப் பதிவு தினமான ஏப்ரல் 18-ஐ நினைவுகூறும் விதமாக 18.4.19 என எழுதப்ட்ட இட்லி கண்காட்சியில் இடம்பெற்றிருந்தது. அது போல் என் வாக்கு விற்பனைக்கு அல்ல எனப்படும் ஸ்லோகனும் அதில் இடம்பெற்றிருந்தது. அது போல் வாக்குப்பதிவு இயந்திரம் வடிவத்திலாலான இட்லியும் தயார் செய்யப்பட்டிருந்தது.

இட்லி சாப்பிட்டா உடம்புக்கு நல்லது, ஓட்டு போட்டால் நாட்டுக்கு நல்லது, சரியாக வாக்களிப்போம், ஜனநாயக கடமையை ஆற்றுவோம் உள்ளிட்ட விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நிறைய அம்சங்கள் அதில் இடம்பெற்றிருந்தன.

News

Read Previous

கனமழை வருவதற்கு முன் அதிகமாக வியர்ப்பதேன்?

Read Next

மன அழூத்தம்.!

Leave a Reply

Your email address will not be published.