கிளர்ச்சிக்கு வரலாறு படைத்த கியூபா

Vinkmag ad

கிளர்ச்சிக்கு   வரலாறு படைத்த      கியூபா
பொன் குலேந்திரன்  ( கனடா)

கியூபாவுக்கு தமிழ் முதியவர்களை  ஒன்றாறியோவில்  இருந்து கோடை காலத்தில்  அழைத்துக் கொண்டுபோவதற்கு   என்று சங்கத்தின் செயற் குழு  முடிவெடுத்தவுடன் கனடாவில் புருவத்தை உயர்த்தியவர்கள்  பலர் . அதுக்கு முக்கிய  காரணம் , சில வட அமெரிக்கர்களுக்கு  கியூபா தீவின் மேல் வெறுப்பு இருந்ததுக்கு  பல அரசியல்  காரணங்கள் இருந்தன . 1959 கியூப புரட்சியைத் தொடர்ந்து, இருதரப்பு நாடுகளின்   உறவுகள் கணிசமாக மோசமடைந்தன. 1961 ஆம் ஆண்டில், யு.எஸ். கியூபாவுடனான இராஜதந்திர உறவுகளைத் துண்டித்து,. 1961 பே ஆஃப் பிக்ஸ் படையெடுப்பு, 1962 கியூபா ஏவுகணை நெருக்கடி மற்றும் லத்தீன் அமெரிக்கா மற்றும் ஆபிரிக்கா முழுவதும் கம்யூனிசத்தை பரப்புவதற்கான பிடல் காஸ்ட்ரோவின் முயற்சிகளுக்கு ஆதரவாக நிற்கும் அமெரிக்க முயற்சிகள், பனிப்போரின் போது கியூபா மீதான அமெரிக்க விரோதத்தின் முக்கிய சிறப்பம்சங்கள்.
****

மிசிசாகா தமிழ்   முதியோர் சங்க அங்கத்தினர்கள் பலரை அழைத்துக் கொண்டு கோடை காலத்தில் எங்கு போவோம் என்ற நான்  அவர்களக் கேட்டபது, அனேகர் கியூபாவைதெரிந்து எடுத்தனர். அதற்கு முக்கிய காரணம் ஒருநான்கு நட்சத்திர ஹோட்டலில் ஏழு நாட்கள் பல வித உணவுவகைககள்,  இலவச மதுபானம். இரவில் கேளிக்கை ஆட்டம், குளிர் ஊட்டிய அறைகள். நீச்சல்தடாகம், தலை நகர்  ஹவானா உட்பட  வரலாறு உள்ள  இடங்களுக்கு சென்று பார்த்தல், கடற்கரையில் உலாவுதல் போன்ற வசதிகளோடு  கியூபா போய் வர விமான பயணம் உற்பட செலவு எண்ணூறு டொலர்கள் மட்டுமே.  வீட்டுக்குள் டிவியை  பார்த்தபடியே முடங்கி கிடந்த முதியவர்கள், விடுவார்களா   அந்த சந்தர்ப்பத்தை. சிலர் தம்பதிகளாக புறப்பட்டனர்  . ஆமாம் அவர்களுக்கு அது எத்தனையாவது தேனிலவோ தெரியாது . போகமுன் நான் சொல்லிவிட்டேன் பயணக் காப்புறுதி எல்லோரும் எடுக்க வேண்டுமென்று   . காரணம் கியூபாவில் ஏதாவது  வருத்தம் வந்தால் அந்த நாட்டில் வைத்திய செலவு அதிகம். அங்கு  திறமை வாய்ந்த மருத்துவ சேவை உள்ளது என அறிந்தேன் .
****

மூன்றரை மணித்தியாலப் பயணத்தின் பின் டொராண்டோ விமான  நிலையத்தில் இருந்து கியூபா சர்வதேச விமான  நிலையத்தை  காலை  ஒன்பது மணிக்கு அடைந்தோம்.  டொராண்டோவுடன் ஒப்பிடும் பொது அது பெரிய விமான நிலையம் இல்லை. ஸ்பானிஷ் மொழி பேசும் அந்த நாட்டில் ஆங்கிலமும் பேசுவார்கள், காரணம் ஆங்கிலம் பேசும் வெளிநாட்டு சுற்றுலா  பயணிகள் அநேகர்  வருவதால் .
சுங்க மேசையில், எங்கள் படம் எடுக்கப்பட வேண்டும் என்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டேன்.எங்கள் பைகள் மீண்டும் எக்ஸ்ரே இயந்திரம் மூலம் வைக்கப்பட்டது.
நாங்கள் அந்த நாட்டிற்கு கொண்டு வரும் பொருட்களின் மதிப்பை அறிவிக்க வேண்டும். கேமரா உபகரணங்கள், மடிக்கணினிகள் மற்றும் பிற மின்னணுவியல் போன்ற விஷயங்கள் இதில் அடங்கும். இந்த படிவம் விமானத்தில் எங்களுக்கு வழங்கப்பட்டது.
நாங்கள் எடுத்து செல்லும் பணத்தின் அளவு $ 5,000 க்கு மேல் இருந்தால் மட்டுமே அறிவிக்க வேண்டும்.
ஜி.பி.எஸ் அமைப்புகளை நாட்டிற்குள் கொண்டு வர முடியாது என்பது கவனிக்கத்தக்கது .  கியூபாவின் உத்தியோகபூர்வ மொழி ஸ்பானிஷ். ஹவானாவிலும் பெரிய ஹோட்டல்களிலும், உல்லாசப் போக்கிடங்களிலும்  ஆங்கிலம் மிகவும் பரவலாகப் பேசப்படுகிறது.
கியூபா விமானநிலையத்தில் எங்கள் பொதிகைகளையும் பாஸ் போர்டையும்  நுணுக்கமாக பரீசலித்த பின் தங்கள் நாட்டுக்கு நாம்  வரும் காரணத்தை  கேட்டார்கள். நாங்கள் முதியவர்கள் என்பதால் அவ்வளவு  கட்டுப்பாடு இருக்கவில்லை சுங்க அதிகாரிகள் எல்லோரினதும் சூட்கேசுகளை திறந்து  பார்த்த போது அதில் எங்களுடன் வந்த பெண்மணி ஒருத்தி சீனி சம்பல். ஊறுகாய், மாசு சம்பல், முறுக்கு  போன்ற பல ஸ்ரீ லங்கா உணவுகளை போத்ல்களில்  எடுத்து வந்திருந்தார்.  அவை யாவற்றையும் சுங்க அதிகாரிகள ஒரு  பக்கத்தில்  எடுத்து வைத்துவிட்டார்கள் . நான் எச்சரித்தும் அந்த பெண்மணி  அந்த பொருட்களை கொண்டு வந்தது பலருக்கு அசௌகரியத்தை கொடுத்தது.
விமான நிலையத்துக்கு வெளியே வந்த போது எங்களைஹோட்டலுக்கு அழைத்து செல்ல இரு பேரூந்துகள் நின்றன. எங்களுக்கு வழக்காட்டியாக  இருந்த பெண்மணி அஞ்சலா ஆங்கிலம் பெசக் கூடியவள் .  நாங்கள் புக் செய்த  ஹோட்டலுக்கு   விமானநிலையத்தில் இருந்து  அரை மணி பயணம். போகும் வழியில் அந்த  நாட்டின்  வறுமையின் பிரதிபலிப்பை  நான் காணக்கூடியதாக இருந்தது. உயர்ந்த மாடி வீடுகளை நான் காணவில்லை . அகண்ட பாதைகள் இல்லை. கார்கள் மிகக்குறைவு  அவைகள் பெரும் பாலும் அமெரிக்க பழையை மொடல் கார்கள்.
நான் அறிந்திருந்தேன் கியூபாவில்  உள்ள கார் மேச்கானிச்குகள் திறமை  சாலிகள் என்று . அனேக  பெண்கள் அரை கால் சட்டை அணிந்து  இருந்தனர் . அது அவர்களின்  ஸ்பானிஷ் கலாச்சாரம் போலும்
கியூபா நாட்டின் முக்கிய  வருமானம் சுற்றுலலாப்  பயணிகள் மூலமும், கரும்பு, புகையிலை மூலமும்    கிடைக்கிறது  அதனால் பல ஹோட்டல்கள் தோன்றிவிட்டன  நாம் எமது பாரடைசஸ் வரடெரோ ரிசார்ட் & ஸ்பா வரதேரோ,  ஹோட்டலை  அடைந்தோம்  எங்களை கியூபன் பெண்கள் ஸ்பானிஷ் இசையில்  நடனம் ஆடி வரவேற்றனர் , ஹோட்டல் மனேஜர்  மார்டின் எங்களை சிரித்த முகத்துடன் கை குலுக்கி வரவேற்றார் .  அதன் பின் எங்கள் அணைவரையும் ஒரு ஹாலுக்குள் கூட்டி சென்று  கியூபாவை  பற்றி  எங்கள் குழுவுக்கு சொன்னார்
“கியூபாவில் குடியேறிய முதல் மக்கள் சிமனி, ஒரு அமெரிண்டியன் மக்கள். 1492 ஆம் ஆண்டில் கிறிஸ்டோபர் கொலம்பஸ் முதன்முதலில் தீவைப் பார்த்தபோது கியூபா மற்றும் பிற தீவுகளின் பிரதான மக்கள்தொகையாக இருந்த டெய்னோ என்ற மற்றொரு அமெரிண்டிய மக்களும் அவர்களைப் பின்தொடர்து ,  ஐரோப்பிய, ஆபிரிக்க மற்றும் பூர்வீக அமெரிக்க வம்சாவளியினர் குடியேறினர் .
கியூபா நதிகள் பொதுவாக குறுகியவை. ஏறக்குறைய 600 ஆறுகள் மற்றும் நீரோடைகளில், ஐந்தில் இரண்டு பங்கு வடக்கே, மீதமுள்ளவை தெற்கே. கியூபாவின் பல கடலோர ஈரநிலங்களில் ஜபாடா தீபகற்பம் மிகவும் விரிவானது. ரியோ க யுடோ 370 கி.மீ நீளமுள்ள மிக நீளமான நதியாகும்.  இந்த நதி சாண்டியாகோ மாகாணத்தில் சியரா மேஸ்ட்ராவில் உயர்ந்து குவாக்கனாயாபோ வளைகுடாவுக்கு பாய்கிறது. அதன் துணை நதிகள் ரியோ சலாடோ, ரியோ பயாமோ மற்றும் ரியோ கான்ட்ராமேஸ்ட்ரே. பொதுவாக, தீவு வடமேற்கிலிருந்து தென்கிழக்கு வரை ஓடுகிறது மற்றும் நீண்ட மற்றும் குறுகலானது – 1,250 கி.மீ நீளமும் அதன் அகலத்திலும் 31 கி.மீ. 1,999 மீட்டர் உயரத்தில் உள்ள பைக்கோ டர்குவினோ, கியூபாவின் மிக உயரமான இடம் கியூபா எது இசை, நிறம், வானத்தில் உயரமான பனை மரங்கள், நறுமணமிக்க வெப்பமண்டல பழம், கார்டேனியா பூசப்பட்ட கடல் காற்று மற்றும் சூடான புன்னகை. கியூபா புகழ்பெற்ற உறுதியான அம்சங்கள் பார்வையாளர்களை மகிழ்விக்கும்.
கொஞ்சம் உற்சாகத்தைத் தேடுபவர்கள் கியூபாவின் உயிரோட்டமான தலைநகரான ஹவானாவில் இதைக்காணலாம் . நீங்கள் விரும்புவது கொஞ்சம் கியூபாவில் மணல் கடற்கரைகள் நிறைய உண்டு  மற்றும் நீல நீர் ஆகியவை உங்கள் நாட்களை இனிமையாக கழிக்க சரியான இடம் கியூபா
“மிஸ்டர் மார்டின் இந்த நாடு அரசியல் பற்றி  சொல்ல முடியுமா “? எங்கள் குழவில் ஒருவர் கேட்டார்
“1952 முதல் 1959 வரை அமெரிக்க ஆதரவுடன் ஆட்சி செய்த  இராணுவ சர்வாதிகாரி. பாடிஸ்டாவுக்கு  எதிராகா 1959  ஆண்டடில் புரட்சி வெடித்தது.
சுமார் 12 மில்லியன் ஜனத்தொகையை கொண்டது  கியூபா.  கியூபாவின் பொருளாதாரம் என்பது பெரும்பாலும் திட்டமிடப்பட்ட பொருளாதாரமாகும், இது அரசு நடத்தும் நிறுவனங்களின் ஆதிக்கத்தில் உள்ளது. கியூபா அரசாங்கம் பெரும்பாலான தொழில்களை சொந்தமாகக் கொண்டு இயங்குகிறது மற்றும் பெரும்பாலான தொழிலாளர் சக்திகள் அரசால் பயன்படுத்தப்படுகின்றன. 1991 ல் சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சியைத் தொடர்ந்து, கியூபாவின் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி தொழிலாளர் கூட்டுறவு மற்றும் சுய வேலைவாய்ப்பை உருவாக்க ஊக்குவித்தது. இருப்பினும், 2019 கியூபா அரசியலமைப்பால் அதிக தனியார் சொத்து மற்றும் தடையற்ற சந்தை உரிமைகள் வழங்கப்பட்டன.
வீட்டுவசதி மற்றும் போக்குவரத்து செலவுகள் குறைவாக உள்ளன. கியூபர்கள் அரசாங்கத்தால் வழங்கப்படும் கல்வி, சுகாதாரம் மற்றும் உணவு மானியங்களைப் பெறுகின்றனர். கியூபன்வாசிகளுக்கு மருத்துவ சேவை இலவசம்.
“எங்கள பயணத்தில் என்ன எதிர்பார்க்கலாம்”? இது இன்னொருவரின் கேள்வி.
“கியூபாவிற்கு நிறைய சலுகைகள் இருந்தாலும், சில நேரங்களில் நீங்கள் எதிர்பார்ப்பது என்னவென்று தெரியாவிட்டால் அது கொஞ்சம் அதிகமாகவும் குழப்பமாகவும் இருக்கும். பல வழிகளில், இது கடந்த காலத்திற்குள் நுழைவதைப் போன்றது. 1950 களின் கிளர்சிக் கார்களை இன்னமும தெருக்களில் காணலாம் . அவர்களின் அனுபவத்தை பகிர்ந்து கொள்ளுங்கள். துல்லியமாக மீட்டெடுக்கப்பட்ட கட்டிடங்களின் கலவையும், காலனித்துவ அழகும் உங்களை  கவரும்.
“ உங்கள் ஹோட்டல் பற்றி சொல்லுங்கள் மிஸ்டர் மார்ட்டின்” இது என் கேள்வி.

“நீங்கள் வந்திருக்கும் 794 அறைகள் கொண்ட குடும்ப நட்புள்ள  பாரடிசஸ் வரடெரோ, ஒரு பரந்த ஆடம்பர ரிசார்ட்டாகும், அதிர்ச்சியூட்டும் லாபி, பிரமாண்டமான கடல்-நீச்சல்  குளம் மற்றும் அழகான வெள்ளை-மணல் கடற்கரை. பாரம்பரிய பாணி மற்றும் இலவச மினிபார் பொருட்களுடன் அறைகள் சுத்தமாக உள்ளன.  குளிர் ஊட்டிய எல்லா வசதிகளோடு அறைகள். கோல்ஃப்   விளையாட வண்டிகள்ககாத்திருக்கிறத. வரடெரோ ஹோட்டலில்  உணவு அதிகமான தரம்  உள்ளது.நீங்கள்  விருப்பும் பழவகைகள், மீன்கள் இறைச்சி வகைகள்  உண்டு. பினகோலா.  கியூபன் ரம்மை சுவைத்து பாருங்கள்  எங்கள் தலைவர் கஸ்டிரோவை   வாயில நீண்ட  சுருட்டோடு  படத்தில் கண்டிருப்பீர்கள் . நீங்கள்  புகைப்பவர் என்றால் உலகில்  பிரபல்யமான   கியூபன்சுருட்டை இங்கு வாங்கலாம்   ”
****
அந்த கூட்டத்தின் பின் எங்கள்  அறைகளுக்கு  சென்று  ஆடைகளை  மாற்றி  ஒரு மணி நேரம் ஓய்வு எடுத்து விட்டு கடலில் நீந்த சென்றோம். எனக்கு இலங்கையில்  உள்ள பெந்தொட்ட  கடற்கரை நினைவுக்கு வந்தது.ஆழமில்லாத கடல் கடற்கரையில் இருந்து முன்நூறு யார் தூரத்துக்கு பயமின்றி நீந்தலாம். நீந்தும் போதுஎங்களுடன் வந்த ஒரு பெண்மணி   நீரில்   நீந்த தத்தளித்தாள். எங்கள் குழுவில்  ஒருவருக்கு நீந்த தெரிந்த படியால் அவர் அந்த  பெண்மணிக்கு உதவினார்.
கடலில் ஒரு மணி நேரம் குளித்தபின் பசி  வயிற்றை  கிண்டியது . கையில் பிநோகோலாடா பானத்துடன்   உணவை தெரிந்து எடுத்துக் கொண்டு மேசைக்கு சென்றோம். சிறிது நமிடங்களில் ஒரு அழகிய  பெண்ஒருத்தி ஏதும் உதவி தேவையா  என்று  வந்து கேட்டாள். அவளின் புன்சிரிப்பும்  ஆடையும் என்னை கவர்ந்தது . இரண்டாவது
கிளாஸ்  பிநோகோலாடாவை அவள் மூலம்   ஓடர் செய்தேன். அவள்  அதை  கொண்டு வந்து  போது அந்த பானத்துக்குள் என்ன  இருக்கிறது  என்று  அவளைக் கேட்டேன்.  புதிய அன்னாசிப்பழத், துண்டுகள் . தேங்காயின் இனிப்பு கிரீம். இனிக்காத தேங்காய் பால். வெள்ளை ரம், புதிய சுண்ணாம்பு சாறு கலந்தது இந்த பானம், சுவைத்து  பாருங்கள் ”  என்றாள் அவள்.
“கியூபாவின் தலைநகரம்“ஹவானா”. அந்த  பெயரின் பொருள் “அழகு”. கியூப கலாச்சார மக்கள் அழகு பற்றி பேசும்போது, அவர்கள் பெரும்பாலும் ஸ்லாங் சொற்களைப் பயன்படுத்துகிறார்கள்,அதில்
கியூப-அமெரிக்க பாடகி கமிலா கபெல்லோ பதிவுசெய்த பாடல் “ஹவானா”, “ஹவானா” பின்னர் கமிலாவின் அதிகாரப்பூர்வ முன்னணி தனிப்பாடலாக மாறியது
ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, பிரான்ஸ், மெக்ஸிகோ, யுனைடெட் கிங்டம் மற்றும் யு.எஸ் உள்ளிட்ட பல நாடுகளில் “ஹவானா” முதலிடத்தைப் பிடித்தது.
.ஹோட்டலில் நான் அறிமுகமான பல சுற்றலா பயணிகளில்  தொம்சன் என்ற புவியியல் ஆராச்சியாளர்  என்னுடன் நெருங்கி பழகினார். அவர் சொன்னார்.
“இங்கிருந்து மேற்கே 800 கி மீ தூரத்தில் உள்ள
மெக்ஸிகோவில் யுகடான் தீபகற்பத்தின் சிக்சுலப் நகருக்கு அருகில் 81 கிலோமீட்டர் விட்டம் கொண்ட ஒரு பெரிய,பள்ளம் உண்டு.  66 மில்லியன் ஆண்டுகளுக்கு  முன்  ஒரு சிறு  கோள் இந்த இடத்தில் பூமியில்  மோதியதால்  .அந்த  பள்ளம் ஏற்பட்டது. அந்த நிகழ்வு  உலகளாவிய காலநிலை சீர்குலைவு கிரெட்டேசியஸ்-பேலியோஜீன் அழிவு நிகழ்வுக்கு காரணம், பெரும் அலைகள்  தோன்றின . பூமியில் 75% தாவர மற்றும் விலங்கு இனங்கள் அழிந்துவிட்டன, இதில் அனைத்து பறவை அல்லாத டைனோசர்களும் அடங்கும்”.

“ அப்போது   தோன்றிய  சுனாமியால்  கரீபியன் தீவுகள் தோன்றி இருக்கலாம் அல்லவா “?

“ இருக்கலாம் “ என்றார் தொம்சன்
“கியூபாவில்  ஹவானாவில் இருந்து  கிழக்கே    870 கி மீ  கௌதமாபே  என்ற  அமெரிக்காவின் கப்பல் படையின்  தளம் இன்னும் இருக்கிறதா “?நான் அவரை கேட்டேன்.
அவர்  சிரித்து வி ட்டு சொன்னார் “ அது ஒரு பெரிய கதை அல்குவைதா  பயங்கர வாதிகள் அமெரிக்காவை தாக்கியபின் 2002 ஆம்ஆண்டு  இந்த பயங்கரவாதிகள் தடுப்பு முகாம்  ஆரம்பிக்கப் பட்டது . அதன் பின்  இராக்   ஆப்கானிஸ்தான்  போன்ற  நாடுகளில இருந்து  பயங்கரவதிகள் இங்கு தடுத்து  வைக்கப்பட்டனர்  இங்குசெல்வதுக்கு  கடுமையான  கட்டுப் பாடுகள் உண்டு”
“இன்னொரு  கேள்வி சேகுவாராவுக்கும்  கியூபாவுக்கும்  என்ன தொடர்பு”?
“1928 iல் அர்ஜென்டீனாவில்  பிறப்பிடமாகக் கொண்டசே குவேரா ஒரு சோசலிசப் புரட்சியாளர், மருத்துவர், மார்க்சியவாதி, அரசியல்வாதி, கியூபா மற்றும் பல நாடுகளின் கொங்கோ உட்பட புரட்சிகளில் பங்குபெற்ற போராளி முக்கியமாக  , தன்னை கியூபா     பிடல் காஸ்ட்ரோவின் போராட்ட இயக்கத்தில் இணைத்துக்கொண்டார். அவ்வியக்கம் 1959 இல் கியூபாவின் ஆட்சி அதிகாரத்தினைக் கைப்பற்றியது. அதன் பின்னர் கியூபாவின் மத்திய வங்கியின் தலைவராக 14 ஆண்டுகள் பணியாற்றினார்”
“ கியூபாவில் முக்கியம் பார்க்க வேண்டியா நகரங்கள் எவை “?
“கியூபாவில் கட்டாயம் பார்க்க வேண்டிய ஐந்து காலனித்துவ நகரங்களை காமகே, டிரினிடாட், சாண்டியாகோ டி கியூபா, சாங்டி ஸ்பிரிட்டஸ் மற்றும் சியென்ஃபூகோஸ். இந்த காலனித்துவ நகரங்களில் பெரும்பாலானவை 16 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் ஸ்பானியர்கள் தீவை காலனித்துவப்படுத்திய காலத்திற்குச் செல்கின்றன, அதாவது அவை சுமார் 500 ஆண்டுகள் பழமையானவை மற்றும் ஏராளமான வரலாற்றைக் கொண்டுள்ளன. கியூபாவில் ஈர்க்கக்கூடிய 263 பாதுகாக்கப்பட்ட இயற்கை பகுதிகள் உள்ளன, இது நாட்டின் நிலப்பரப்பில் கிட்டத்தட்ட 22 சதவீதத்தை உள்ளடக்கியது. கியூபாவின் பழுதடையாத சில காட்சிகளை நீங்கள் அனுபவிக்க விரும்பினால், பராகோவா நாட்டில் ஒன்பது யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளங்கள் உள்ளன. ஹனி விரிகுடாவில் கியூபாவின் கிழக்கு முனைக்கு அருகில் அமைந்துள்ள பராக்கோவா நாட்டின் மிகப் பழமையான மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட நகரமாகும்.  இது ஒரு ஒதுக்கப் பற்ற நகரம் “

***
யுனெஸ்கோவின்  உலக பாரம்பரியஇடமான பழையை ஹவானாவின்  நடந்து சென்றோம், நகரத்தின் வரலாற்றைப் பற்றி மட்டுமல்லாமல், இப்பகுதியில் நடைபெற்று வரும் மறுசீரமைப்பு பணிகளையும் அறிந்த ஒரு கட்டிடக் கலைஞருடன். நான்  சந்தித்தேன் –
பழைய ஹவானாவின் மையப்பகுதியில் உள்ள எல் டெல் ஃப்ரெண்டே என்ற உணவகத்தில் எங்கள் குழு மதிய உணவு சாப்பிட்டோம் இங்குள்ள பானங்கள் ஆச்சரியமாக இருந்தது, எனக்கு தர்பூசணி மோஜிடோ என்ற பானம் எப்போதும்  எங்களுக்கு புதிய விஷயம்!

பின்னர், நாங்கள் சில இடங்களுக்கு சைக்கிள் டாக்ஸிகளை எடுத்துச் சென்றோம்
ஒரு நாள் இரவு நாங்கள் கியூபாவின் மிகவும் அழகான மற்றும் புகழ்பெற்ற உணவகமான லா குவாரிடாவில் ஒரு தனியார் கூரை விருந்துக்குச் சென்றோம்,.
.
டாக்சிகளில்  சவாரி செய்வதற்கு முன்முதலில்  உத்தியோகபூர்வ (மஞ்சள்) டாக்சிகளை எடுத்துக்கொள்வது சிறந்தது, ஏனெனில் அவை மிகவும் வசதியாகவும், நம்பகமானதாகவும், ஏ / சி இருக்கும். பழைய ஹவானா, வேதாடோ மற்றும் சென்ட்ரோ ஹவானா சுற்றுப்புறங்களுக்கு இடையில் ஒரு பொதுவான கட்டணம் 10-20 கியூ ஆகும்.
பாட்டில் தண்ணீரை மட்டும் குடித்தோம் . மதிய உணவு மற்றும் இரவு உணவிற்கு நாங்கள் பார்வையிட்ட இடங்கள் அனைத்தும் அவற்றின் பானங்களில் பாட்டிலில் அடைக்கப்பட்ட தண்ணீரைப் பயன்படுத்தின.
ஹோட்டலில் இணையம் இருந்தபோது, நாங்கள்  கனடாவில்  பாவித்ததை விடவேகம் மிகவும் குறைவு !
கியூபா மிகவும் பாதுகாப்பானது, ஆனால் மோசடிகள் மற்றும் பிக்பாக்கிங் ஆகியவை பொதுவானவை
கியூபாவில் சில முடிச்சு மாறிகள்இருக்கிறார்கள் , எனவே எங்கள் பாஸ்போர்ட் அல்லது அதிக பணத்துடன் சுற்றி நடக்க தவிர்த்தோம் . எங்கள் பாஸ்போர்ட்டையும், எங்களுக்கு தேவையில்லாத பணத்தையும் ஹோட்டல் அறையில் பாதுகாப்பாக வைத்தேன் .
ஹவானாவில் பல ஷாப்பிங் செய்ய விருப்பங்கள் எனக்கு  இல்லை என்றாலும், கியூபனால் தயாரிக்கப்பட்ட பொருட்களை எடுத்துச் செல்லும் சில கடைகள் உள்ளன.
பழைய ஹவானாவில் கிராண்டெஸ்டினா ஒரு வடிவமைப்பு கடை கிராஃபிக் டிசைனர் இடானியா டெல் ரியோவுக்கு சொந்தமானது. அசல் கோஷங்கள் மற்றும் நவநாகரீக வடிவமைப்புகளுடன் பலவகையான பொருட்களை , துணி பைகள், சட்டை, முக்கிய சங்கிலிகள், தொப்பிகள் மற்றும் பல அவர்களிடம் உள்ளன,
கியூபா இரட்டை நாணய அமைப்பில் இயங்குகிறது. பார்வையாளர்கள் மாற்றத்தக்க பெசோவை (சி.யூ.சி) பயன்படுத்துவார்கள், உள்ளூர்வாசிகள் மோனெடா நேஷனல் என்றும் அழைக்கப்படும் பெசோ கியூபனோவை (சி.யு.பி) பயன்படுத்துகின்றனர்.
கியூபாவின் நாணயம் சர்வதேச அளவில் வர்த்தகம் செய்யப்படாததால் உங்கள் பணத்தை வந்தவுடன் மாற்ற வேண்டும்.
பெரும்பாலான ஹோட்டல்களில் உங்கள் பணத்தை முன் மேசையில் மாற்ற முடியும்.
விசா & மாஸ்டர்கார்டு பெரும்பாலான ஹோட்டல்களாலும் சில உணவகங்களாலும் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. சிறிய நகரங்களில், பணம் தேவைப்படும்.
பெரிய நகரங்களில் ஏடிஎம்கள் உள்ளன, ஆனால் நாங்கள் அவற்றைப் பயன்படுத்தவில்லை.
கியூபா ஒரு காலத்தில் உலகின் மிகப்பெரிய கரும்பு ஏற்றுமதியாளராக இருந்தது. 1960 கள் வரை, அமெரிக்கா தனது கரும்பு இறக்குமதியில் 33% கியூபாவிலிருந்து பெற்றது. கியூபா புரட்சிக்குப் பின்னர், புரட்சிகர அரசாங்கம் விவசாய நிலங்களை தேசியமயமாக்கியது, மற்றும் சோவியத் ஒன்றியம் கியூபாவின் முக்கிய விவசாய உற்பத்தியான கரும்புக்கு பிரீமியம் விலையை செலுத்துவதன் மூலமும், உரங்களை வழங்குவதன் மூலமும் கியூப விவசாயத்தை ஆதரித்தன.

கியூபாவில் உற்பத்தி செய்யப்படும் வெப்பமண்டல பழங்கள் மா, பப்பாளி, மாமி சபோட், அன்னாசிப்பழம், , கொய்யா, தேங்காய் மற்றும் அன்னாசி  கிடைக்கும் .
835 கிலோமீட்டர் மத்திய ரயில் கிழக்கு பிராந்தியத்தில் ஹவானாவிலிருந்து சாண்டியாகோ டி கியூபா வரை செல்கிறது. … நெட்வொர்க் கியூபாவில் உள்ள ஆறு துறைமுகங்களை இணைக்கிறதுஹவானாவிலிருந்து பாசோ ரியல் டி சான் டியாகோவுக்குச் செல்வதற்கான மலிவான வழி  ரயிலாகும் .  $ 5 – $ 9 செலவாகும் மற்றும் பயணம் ஐந்து மணித்தியலாம் எடுக்கும் டியாகோவுக்குச் செல்வதற்கான விரைவான வழி டாக்ஸியில்  செல்வது .
நாங்கள்  அங்கிருந்த எழு நாட்களில்  இரு நாட்கள்   மழை பெய்தது அந்த எழு நாட்கள் எங்கள் குழுவுக்கு  நினைவில்  இருந்து மறையாத  நாட்கள் .

****

News

Read Previous

எதைச் சொல்வது.?எதை விடுவது.?

Read Next

கவிஞர்களுக்கு ஓர் அறிவிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *