எதைச் சொல்வது.?எதை விடுவது.?

Vinkmag ad

ஏ.ஆா்.தாஹாவின்
சிந்தனை அரும்புகள்
—————————————
எதைச் சொல்வது.?எதை விடுவது.?
——————————————————
நாடிக்கட்டு கட்டும் வரை
பொருள் மேல் ஆசைகொண்டு
தேடிக்கிட்டு ஓடுகின்ற
மனிதனை என்னவென்பது…….

பணம் பணமென்று மனிதன் அதன் பின்னால் ஓடுகிறான். மேலும்……

இறக்கும்வரையில் கிறக்கம் கொண்டு
நிலங்கள் வாங்கிக் குவிக்கிறான்
இறந்த பின் பள்ளிவாசல் நிலத்தில்
இலவசமாய் வந்து அடங்குகிறான்.
இதுதான் அவனது இறுதி நிலை.

மூடிக்கிட்டு போக வேண்டிய
பெண்ணணானவள் தன்னுடலை
காட்டிக்கிட்டு போவதைத்தான்
நாகரீகம் என்கிறாள்……..

அங்கங்கள் வெளியில் தெரியும்
வண்ணம் இறுக்கமான ஆடைகளை அணிவித்து தன் மனைவியை, மகளை
வெளியில் அழைத்துச் செல்லும் மானங்
கெட்ட மடையர்கள் இருக்கும் வரை
இதைத் தான் நாகரீகம் என்பர்.

ஜோடிச்சுக்கிட்டு சிங்காரித்து
வீதியில் செல்லும் பெண்ணானவள்
நெருப்பிலிட்டுப் பொசுக்கப்படும்
மறுமையை மறந்தது ஏனோ…?

கணவனின் முன்னில் மட்டும் தன்
கூந்தல் அழகையும் உடலழகையும் காட்ட
வேண்டிய பெண், டிக் டாக் போன்ற
வலைத் தளங்களில் தன்னுடலழகை,
வசீகர குரலை வெளிச்சம் போட்டு காட்டுகிறாள். அதில் தீனை மறந்த சில மூதேவிகளும் உள்ளடக்கம்.

வாடிக்கிட்டு வாசல் தேடி வரும்
ஏழைக்குக்கு உதவாமல் கதவை
சாத்திக்கிட்டு கொடுக்க
மறுக்கிறார்கள் பலர்…….

வாசல் தேடி வரும் ஏழை எளியோரை
துச்சமாக மதித்து, முகத்தில் அடித்தார்
போல் கதவை சாத்துவோரும் உலகில்
இருக்கத்தான் செய்கிறார்கள்.இறைவன்
தந்த பொருளிலிருந்து ஸதகா ஜகாத்
கொடுப்பதற்கு உனக்கென்ன கேடு….?
பிறக்கும் போதே உன்னுடன் பொருளை
கொண்டு வந்தாயா?இது உன்னுடையதா? இறைத் தந்ததா…?சிந்தி செயல்படு!.

கணக்கிட்டு கொடுக்க வேண்டிய
ஜக்காத்தை கொடுக்காதோா்
சீறிக்கிட்டு தீண்ட வரும் கொடுநாகம்
சுஜா அக்ராவை மறந்தது ஆச்சரியம்தான்.

இறைவன் தந்த செல்வத்திலிருந்து
அவன் ஏவிய பிறகாரம் ஏழை வரியை
செலுத்தாத வரையில், உனது செல்வம்
கேள்விக் குறிதான். மண்ணறையில்
கொடு நாகத்தின் தீண்டுதலைத் தாங்க
முடியும் என்றெண்ணுவோா் வேண்டு
மானால், ஜகாத் கொடுக்காமல் தவிர்ந்து
கொள்ளட்டும்.

சாடிகிட்டு ஒருவருகொருவர்
வசைமாரி பொழிந்து கொண்டு
மோதிக்கிட்டு கிடக்கிறார்கள்
வாட்ச்அப் தளங்களில் பலர்…..

புனித மிக்க ரமளானிலும் கூட
அமல்களில் கவனம் செலுத்தாமல்
வாட்ச்அப் தளங்களில் ஒருவரை
யொருவர் தாக்கிக் கொண்டும், ஒரு
அமைப்பு மற்ற அமைப்பை விமர்சித்துக்
கொண்டும், இரவு முழுவதும் இதே
வேலையாக இருப்போரை நாம் என்ன
வென்று சொல்வது.?கடைசி பத்திலாவது
மாற்றம் நிகழுமா..? என்று பார்ப்போம்.

பீத்திகிட்டு செல்வ செருக்கில்
மண்ணில் பலர் பெருமை
பேசிகிட்டு உலக வாழ்வில்
மூழ்கிக் திரிகிறார்கள்..

செல்வத்தால் எதையும் சாதிக்கலாம்
என்று எண்ணியவர்களெல்லாம்……..
இன்று, வானலாவிய செல்வம் இருந்தும்
உயிர் தப்பினால் போதும் என்ற நிலை
க்கு தள்ளப்பட்டுக் கிடக்கின்றனர்.
இதுதான் கொரோனாவின் வாயிலாக, செல்வத்தால் எதுவுமில்லை என்பதை இறைவன் நமக்குக் கற்றுத் தந்த பாடம்.

மாட்டிக்கிட்டு மறுமையில்
தாங்கள் தவிக்கப் போவதை மறந்து
பாங்கின் ஓசை கேட்டும் எழுந்திராமல்
போர்த்திகிட்டு தூங்குகிறார்கள்.
பலருக்கு சுபுஹு தொழுகை களா……

பர்ளான தொழுகையை மறந்து
சிரிச்சுகிட்டு இறையை மறந்து
வீணில் பொழுதைக் கழிப்போா்
முழிச்சிகிட்டு மறுமை நாளில்
விழி பிதுங்கி தவிப்பார்களே….இதை
புரிஞ்சிகிட்டு உணர மாட்டார்களா…..?

எதைச் சொல்வது.?எதை விடுவது.?

ஏ.ஆா்.தாஹா(ART)09-05-2020

News

Read Previous

தமிழ் மொழி

Read Next

கிளர்ச்சிக்கு வரலாறு படைத்த கியூபா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *