கவிதைகள் (All)

வள்ளுவனே…

வள்ளுவனே…
~~~~
இரு வரியில்
இவ்வுலகில்
வாழ்வியலை
வகுத்து தந்தவனே.

முப்பால் தந்த
முதிர்ச்சிக் கவிஞனே…
முறையான வாழ்வுதனை
வழியாய் காட்டியவனே.

நூல் வழியே
நெறிப்படுத்தும்
நுண்ணறிவு
நாயகனே…

நுணுக்கமாய்
கருப்பொருளை
கரையேறச்செய்தவனே.

அறப்பால் வழியே
அன்பை காட்டி…
சிறப்பாய் வாழ்ந்த
சீர்மிகு சிந்தனையாளன்.

பொருட்பாலின்
பொக்கிஷத்தை
பொழிவாய்
பொலிந்தவன் நீ.

பொல்லாதோர்
நிலை கண்டு
பொங்கி
எழுந்தவன் நீ.

கற்பிற்கு
பால் வடித்து
கண்ணியத்தை
காத்தவன் நீ.

கல்வியின்
மகிமையை
கண்டிப்புடன்
கூறியவன் நீ.

உலகக்கவிஞர்களின்
ஊற்றுக்கண்
நீதானே…

உத்தமமான
வாழ்விற்கு
உனது நூல்
அடித்தளம் தானே.

துணிவையும்
அறிவையும்
துல்லியமாய்
காட்டினாய்…

தூய இல்
வாழ்வை
தூணாய்
மாற்றினாய்.

நீதியின்
நேர்மையை
நெறிப்படுத்திய
உன் வரிகள்…

நேசிக்கும்
குணம் கொண்ட
அரசருக்கு
அறவழிகள்.

பழுக்காத
ஓலையில்
வழுக்காத
நெறிகண்டாய்…

எழுத்தாணி
கொண்டு
ஏற்றத்திற்கு
வழிகண்டாய்.

உலகெங்கும்
உலாவரும்
உன் குறள்
மெய்தானே…

உண்மையாக
நேசித்தால்…நல்
வாழ்விற்கு
வழி தானே.

அன்புடன்
அரும்புக்கவி
அன்வர் உசேன்
அஜந்தா டெக்ஸ்டைல்ஸ்
ராமநாதபுரம்
936 306 2820

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button