இராமநாதபுரம்

மஞ்சப்பை விழிப்புணர்வு

ராமேஸ்வரம் அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளி வளாகத்தில், மகாகவி பாரதியாரின் 144-வது பிறந்த நாளையொட்டி, தலைமை ஆசிரியர் ராஜேஸ் தலைமையில், சுற்றுச்சூழல் மன்றம் (Ego Club) ஒருங்கிணைப்பாளர் ஜேம்ஸ் ஆனந்த் முன்னிலையில், மஞ்சப்பை விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் ராமநாதபுரம் பொருளாதார குற்றப்பிரிவு சிறப்பு சார்பு ஆய்வாளர் சுபாஷ் சீனிவாசன் சுற்றுச்சூழல் மன்றம் (Ego Club) மாணவர்களுக்கு, மஞ்சப்பை விநியோகம் செய்து பிளாஸ்டிக் பயன்படுத்துவதனால் ஏற்படும் தீமைகள் மற்றும் மஞ்சப்பை பயன்பாடு குறித்து விளக்கி சிறப்புரை ஆற்றினார். இந்நிகழ்வை பசுமை ராமேஸ்வரம் ஒருங்கிணைப்பாளர் சரஸ்வதி மற்றும் முத்துராமலிங்கம் ஏற்பாடு செய்திருந்தனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button