இராமநாதபுரம்
பொங்கல் விழா

இராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டாட்சியர் அலுவலகத்தில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு வட்டாட்சியர் ஸ்ரீராம் மற்றும் வட்டாட்சியர் (சபாதி ) சேதுராமன் ஆகியோர் தலைமை வகித்தனர். துணை வட்டாட்சியர்கள் கீதா, வேலவன், வெங்கடேஸ்வரன், லலிதா, விஜயா ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக ஊழியர்களுக்கிடையேயான விளையாடிப் போட்டிகள் நடைபெற்றது. நிகழ்ச்சியின் முடிவில் வெற்றி பெற்றவர்களுக்கு வட்டாட்சியர் ஹீராம் பரிசு பொருட்கள் வழங்கினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க கமுதி வட்டக்கிளைத் தலைவர் செந்தில் முருகன் செயலாளர் மங்களேஸ்வரன் உட்பட நிர்வாகிகள் அனைவரும் ஏற்பாடு செய்திருந்தனர்.





