கட்டுரைகள்

முல்லைப் பெரியாறு அணை

“116 வருட சுண்ணாம்பு அணை இன்னும் எவ்வளவு நாள் தாங்கும்? தங்கள் இடத்திலேயே, தங்கள் செலவிலேயே, புதிய அணையைக் கட்டி,தமிழ் நாட்டிற்கு அதே அளவு தண்ணீரைத் தருவதாக கேரளா சொல்கிறதே. மேலும் ஒப்பந்தம் எழுதிக்தருகிறோம் என்கிறார்களே. இதை ஏற்றுக் கொள்ள தமிழ் நாடு ஏன் மறுக்கிறது? இது என்ன வீண் பிடிவாதம்? இது என்ன பைத்தியக்காரத்தனம்?” என சில ஊடகங்கள் கூறுகின்ன்றன.

கேரளா இதுவரை செய்த அநியாயங்கள்,புதிய அணை கட்டி இனி செய்ய உத்தேசித்திருக்கும் அயோக்கியத்தனங்கள் இவை எதுவுமே வெளி உலகுக்குத் தெரியவில்லை.ஏன்தமிழ் நாட்டிலேயே சென்னையிலேயேகூட, படித்தவர்கள் பலருக்கு கூட தெரியவில்லை! புதியஅணை கட்டுவதில் என்ன தவறு? அதான்அதே அளவு தண்ணீர் தருகிறேன் என்கிறார்களே என்று தமிழர்களே கேட்கிறார்கள். தமிழ்நாளிதழ்களும், அரசியல் கட்சிகளும்தொலைக்காட்சிகளும் கூட தமிழ் மக்களைதயார் படுத்துவதில் தவறி விட்டன என்று தான்சொல்ல வேண்டும்.

இனியாவது விழித்துக் கொள்ள வேண்டும். முல்லைப் பெரியாறு அணை கட்டப்பட்டது பிரிட்டிஷ் ஆண்ட காலத்தில் – 1895ல்.அப்போது இந்த அணை கட்டும் இடம் திருவாங்கூர்சமஸ்தானத்தின் கட்டுப்பாட்டில் இருந்ததாககருதப்பட்டது(உண்மை அது அல்ல.தமிழ் நாட்டின்வரையரைக்குள் தான் இருந்தது).

எனவே பிரிட்டிஷார் திருவாங்கூர் மஹாராஜாவுடன் இந்த அணை கட்டப்படும், மற்றும் அதன் நீர்ப்பிடிப்பு பகுதியான சுமார் 8000 ஏக்கர் நிலத்தை 999 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுத்து (ஆண்டுக்குரூபாய்40,000/- குத்தகைப் பணம்) இந்தஅணையை 1887ல் கட்ட ஆரம்பித்து1895ல்கட்டி முடித்தனர்.

இதில் வேடிக்கை என்னவென்றால், இதில் அடிப்படையான பெரியாறு உற்பத்தியாவது தமிழ் நாட்டில் தான். அணையும் தமிழ் நாட்டிற்குசொந்தமானது. அதை நிர்வகிப்பதும் தமிழ் நாடுதான். ஆனால் இடம் மட்டும் கேரளாவிற்கு சொந்தம்.அதிகாரம் செலுத்துவதும்அவர்களே!

இந்த அணையின் உயரம்-கொள்ளளவு 152 அடி. இதன் மூலம் பாசனம் பெறும் நிலம் சுமார் 2,08,000 ஏக்கர்.

மதுரை, தேனி, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 4 மாவட்டங்களைச் சேர்ந்த10 லட்சம் விவசாயிகள்பாசனத்திற்கும்,60 லட்சம் மக்கள் குடிநீருக்கும் இந்த அணையை நம்பி இருக்கிறார்கள். இந்த அணை பறிக்கப்பட்டால் இத்தனை இடங்களும் பாலைவனங்கள்ஆகும். இத்தனை ஜனங்களும் பிழைப்பு எங்கே போவார்கள்.

பிரச்சினை ஆரம்பித்ததுஎப்படி? எப்போது?

கேரளா, இதற்கு சுமார் 50 கிலோமீட்டர் கீழே, இடுக்கியில் 1976ல் ஒரு அணையும் நீர்மின்நிலையமும் கட்டியது. பின்னர் தான் ஆரம்பித்தன அத்தனை தொல்லைகளும். பெரியாறு அணையின் மொத்த கொள்ளளவே 15.66 டிஎம்சி தான்.அதிலும் சுமார் 10 டிஎம்சியை தான் பயன்படுத்த முடியும்.(104 அடி வரை டெட் ஸ்டோரேஜ்.)
ஆனால் இடுக்கி இதைப் போல் 7 மடங்கு பெரியது. கொள்ளளவு 70டிஎம்சி.பெரிய அணையைக் கட்டி விட்டார்களே தவிர அதுநிரம்பும் வழியாகக் காணோம். 3 வருடங்கள் பொறுத்துப் பார்த்தார்கள். பெரியாறு வருடாவருடம் நிரம்பிக் கொண்டு இருந்தது.ஆனால் இடுக்கிநிரம்பவே இல்லை.

அப்போது போடப்பட்ட சதித்திட்டம் தான் பெரியாறு அணைக்கு ஆபத்து என்கிறகுரல் கூக்குரல்.
சுண்ணாம்பு அணை உடைந்து விடும், அதிலிருந்து வெளிவரும் நீரால்35லட்சம்மக்கள் செத்துப் போவார்கள். எனவே உடனடியாக புதிய அணை கட்டுவதே தீர்வு! புதிய அணையினால் அவர்களுக்கு என்ன லாபம்?மேலே இருக்கும்பழைய அணையை இடிப்பதால், நீர்பிடிப்பு பகுதியிலிருந்து அத்தனை நீரும் நேராக இடுக்கிக்கு வந்து அதை நிரப்பும் சரி நிரம்பட்டுமே. நல்லது தானே! அதான் தமிழ்நாட்டுக்கு இதே அளவுதண்ணீர் தருகிறேன் என்று சொல்கிறார்களே என்று உடனே மக்கள் கேட்கிறார்க்ள்.அங்கே தான் இருக்கிறது அவர்கள் சாமர்த்தியம்.

பெரியாறு அணை இருப்பது கடல் மட்டத்திலிருந்து 2709 முதல் 2861 அடி உயரம் வரை. இதிலிருந்து மலையைக் குடைந்து குகைப்பாதை வழியாகதண்ணீர் தமிழ் நாட்டை நோக்கி கொண்டு வரப்படுகிறது.

புதிய அணையை கட்டப்போவது 1853 அடிஉயரத்தில்.இந்த அணை கட்டப்படும் உயரத்திலிருந்து தமிழ் நாட்டிற்கு தண்ணீரைத் திருப்பி விட முடியாது. நமக்கு பெரியாறு அணையிலிருந்து நீர் எடுத்து வரும்பாதை இதை விட உயரத்தில் ஆரம்பித்து, ஒரு கிலோமீட்டர் பயணத்திற்கு பிறகு 5704 அடி நீளமுள்ள மலையைக் குடைந்த குகை வழியாக திசை மாறிவந்து பின்னர் கீழே வைகையில் கலக்கிறது.
அணையைக் கட்டிய பிறகு, இவர்கள் உண்மையாகவே விரும்பினாலும் நீரைத்திருப்ப முடியாது. மேலும் புதிய அணையிலிருந்து ஆண்டு முழுவதும் நீர்மின்சாரம் உற்பத்தி செய்யநீரை வெளியேற்றிக் கொண்டே இருக்கப் போகிறார்கள். எனவே அணை எப்போதுமே முழுவதுமாக நிரம்பிஇருக்காது. தமிழ் நாட்டிற்கு தண்ணீர் நிச்சயமாககிடைக்காது.புதிய அணையினால் தமிழ் நாட்டிற்கு பயன் இல்லை.

பழைய சுண்ணாம்பு அணை எப்போது வேண்டுமானாலும் உடைந்து விடும். 35 லட்சம் மக்கள் செத்து விடுவார்கள் என்கிறார்களே?

அயோக்கியத்தனம். வடிகட்டிய அயோக்கியத்தனம்.
முதலாவதாக – பெரியாறு அணை உடைந்தால் தண்ணீர் மலைப் பள்ளத்தாக்குகள் வழியாகப் பாய்ந்து நேராக கீழே உள்ள இடுக்கி அணையைத் தான்வந்தடையும்.பெரியாறு அணையிலிருந்து அதன் முழு நீரும்(10 டிஎம்சி) ஒரே நேரத்தில் வெளியேறினாலும்,நேராக அதைப்போல்7 மடங்கு கொள்ளளவு உடைய இடுக்கி அணையைத் தான் வந்தடையபோகிறது. இடையில் எந்த நாடு, நகரமும் இல்லை.
வாதத்திற்காக இடுக்கி அணை ஏற்கெனவே நிரம்பி இருந்தாலும் வெளியேறும் நீர் பெரியாறுஅணையிலிருந்து இடுக்கி வந்து சேர 4 மணி நேரம்ஆகும். அதற்குள்ளாக இடுக்கியிலிருந்துதேவையான நீரை வெளியேற்றி விட முடியும்! எனவே வெள்ளத்தால் பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள் என்கிற பேச்சே அபத்தமானது.

இரண்டாவதாக – 1976ல் இடுக்கி அணையை கட்டினார்கள். 1979ல் பெரியாறு அணை உடையப்போகிறது என்று குரல் எழுப்பினார்கள்.
பயத்தைக் கிளப்பினார்கள்.சுப்ரீம் கோர்ட் வரை போனார்கள். 2000 ஆவது ஆண்டு சுப்ரீம் கோர்ட் நிபுணர் குழுவைஅமைத்தது. நிபுணர் குழுவின் ஆலோசனைப்படி அணை அனைத்து விதங்களிலும் பலப்படுத்தப்பட்டது. கேரளா சொல்வது போல் இது வெறும் சுண்ணாம்பு அணை அல்ல.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button