கவிதைகள் (All)

ஓணம் பண்டிகை வாழ்த்துக்கள்

ஓணம் பண்டிகை வாழ்த்துக்கள்.

மலையாள தேசத்து மாந்தரெல்லாம் 

மனமுவந்து கொண்டாடும் பொன்னாளாம் 

மண்ணுலகம் வந்து தன்

மக்களைக் காணவே

மகாபலி சக்கரவர்த்தி வரும்

நன்னாளாம்.- அவரை 

மகிழ்வுடன் வரவேற்றுக் கொண்டாடும் திருநாளாம். 

வண்ண வண்ணப் பூக்கள் கொண்டு அத்தப்பூ கோலமென

வகை வகையாய்க் கோலமிட்டு 

வெண்பட்டாடையுடுத்து 

ஆவணித் திருவோண நாளில்

ஆலயங்களில் கூடி

வாமன மூர்தியை

ஆராதனைகள் செய்து ,

கதகளி , மோகினியாட்டம் ,

கோலாட்டம் கூடி ஆடி,

ஓணம் சத்யா என்னும் 

ஒப்பற்ற விருந்து சமைத்து 

உறவுகளுடன் கூடி 

உற்சாகம் பொங்கிடவே

ஓணம் கொண்டாடுவோர்க்கு 

உளமார்ந்த வாழ்த்துகள்.

அன்புடன் வாழ்த்தும்,

சிலேடை சித்தர் சேது சுப்பிரமணியம்.

5.9.2025.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button