பரமக்குடியில்பாராட்டு விழா

பரமக்குடியில்பாராட்டு விழா

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் கராத்தே பயிற்சி நிறுவனமான ஸ்பார்க் கராத்தே அமைப்பின் சார்பில் தேசிய மற்றும் மாநில அளவில் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற வெற்றியாளர்களுக்கு பரிசளிப்பு மற்றும் பாராட்டு விழா இன்று அமைப்பின் பயிற்சி கூடத்தில்
பயிற்சியாளர் மணிகண்ட பிரபு தலைமையில் நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக சென்ஸாய் சசிகுமார், டாக்டர் காளிதாசன்,
ஆம் ஆத்மி கட்சியின் மாவட்ட செயலாளர்
சி மு முத்துக்குமார், பரமக்குடி 16 வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் துர்கா நந்தகுமார் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.
பரிசளிப்பு மற்றும் பாராட்டு விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு ஆம் ஆத்மி கட்சியின் மாவட்ட செயலாளர்
முத்துக்குமார் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற வெற்றியாளர்களுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கினார்
முன்னதாக, ஸ்பார்க் கராத்தே அமைப்பின் சார்பில் திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் மாநில அளவில் நடைபெற்ற கராத்தே போட்டியில் கலந்து கொண்டு தங்கப்பதக்கம் வென்ற காரடர்ந்தகுடியை சேர்ந்த குரு.அனுஸ்ரீ என்ற மாணவிக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.




