முதுகுளத்தூரில் மாபெரும் மீலாது விழா பொதுக்கூட்டம்

முதுகுளத்தூரில் மாபெரும் மீலாது விழா பொதுக்கூட்டம்

முதுகுளத்தூரில் மாபெரும் “சமூக நல்லிணக்க மீலாது விழா”பொதுக்கூட்டம்,
கீழக்கரை செப்,9
இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அனைத்து ஜமாஅத் மற்றும் முதுவை நகர் உலமா மஜ்லிஸ் இணைந்து நடத்திய “எல்லோருக்கும் சொந்தம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள். என்ற தலைப்பில் சமூக நல்லிணக்க மீலாது விழா பொதுக்கூட்டம், முதுகுளத்தூர் பேருந்து நிலையம் எதிர், சந்தை பேட்டை முன்பு, அமைந்திருக்கும் வளாகத்தில் வைத்து, “சமத்துவ சமூக அரங்கம்” என்ற அரங்கத்தில் வைத்து வெகு சிறப்பாக நடைபெற்றது.
இவ்விழாவிற்கு மௌலானா எஸ்.அஹமது பஷீர் சேட் ஆலிம். மன்பஈ ஹஜரத் . முதுவை நகர் உலமா மஜ்லிஸ் கௌரவத் தலைவர். தலைமை இமாம் முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசல் அவர்கள் தலைமை தாங்கினார்கள்.
முன்னிலை முதுகுளத்தூர் முஸ்லிம் அனைத்து ஜமாஅத், அனைத்து இஸ்லாமிய வாலிப சங்கங்கள், மற்றும் முதுகுளத்தூர் அனைத்து சமுதாய தலைவர்கள், அனைத்து சமுதாய சங்க நிர்வாகிகள், முன்னிலை வகித்து சிறப்பித்தனர்.
கிராஅத் மௌலானா காரி, பி.அஸ்மதுல் ஹசன் நிஜாமீ ஹஜ்ரத் அவர்கள் இறை வேதம் ஓத. நிகழ்வின் துவக்கமாக “தமிழ்த்தாய் வாழ்த்து” பாடப்பட்டு, நிகழ்ச்சி ஆரம்பமானது.
நபி புகழ்: மௌலானா அல்ஹாஃபிழ் ஏ.எஸ்.முஹம்மது உஸ்மான் அலி அல்தாஃபி ஹஜரத் அவர்கள் கீதம் பாட. மௌலானா அல்ஹாஃபிழ் ஏ.ஷாஹுல் ஹமீது பாகவி ஹஜரத் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்த, துவக்க உரை: மௌலவி அல்ஹாஃபிழ் ஏ.முஹம்மது சிராஜுதீன் மஹ்ழரி ஹஜரத் திடல் பள்ளிவாசல் இமாம் அவர்கள் நிகழ்த்த. “சமத்துவ சமய அரங்கம் ” நிகழ்வு தலைவராக அமர்ந்து நிகழ்ச்சிய நடத்திய, எஸ்.அஹமது பஷீர் சேட் ஆலிம் ஹஜரத் அவர்கள் தலைமை உரை நிகழ்த்தினார்கள்.
மேலும் வாழ்த்துரை: எஸ்.சந்திரசேகர் பிஏபிஎல். அகில இந்திய வழக்கறிஞர் சங்கம் அவர்களும். நல்லாசிரியர் எ.காதர் முஹைதீன் பி.ஏ.பி எட் அவர்களும். மௌலவி ஜெ.செய்யது சுல்தான் அலி பாதுஷா ஆலிம் மன்பஈ அவர்களும். பட்டிமன்ற பேச்சாளர் ஓய்வு பெற்ற ஆசிரியர் எஸ் துரைப்பாண்டியன் ஆசிரியர் அவர்களும். சமூக ஆர்வலர் கே கருப்பையா ஆச்சாரியார், ஜபருல்லாகான் திடல் பள்ளிவாசல் ஜமாஅத் தலைவர், எம்.பி.பக்கீர் முஹம்மது முதுகளத்தூர் முஸ்தபாபுரம் ஜமாத் தலைவர் அவர்களும் கலந்து கொண்டு, சிறப்பித்து, வாழ்த்துரை வழங்கினார்கள்.
இந்நிகழ்விற்கு சிறப்பு அழைப்பாளர்களாக,ஜே.அகத்தியன் என்ற அகஸ்தியன் ஜோசப். “சமூகம் எதிர்பார்க்கும் மனிதநேயம்” என்ற தலைப்பிலும். தவத்திரு திருவடிக்குடில் சுவாமிகள். நிறுவனர்: ஜோதிமலை இரைப்பணி திருக்கூட்டம் கும்பகோணம்.”ஆன்மீகம் போதிக்கும் சமூக அமைதி” என்ற தலைப்பிலும்
மௌலானா மௌலவி எம்.ஏ.சவுகத் அலி உஸ்மானி ஹஜரத். முதல்வர்: அஸ்லமிய்யா அரபிக் கல்லூரி கடையநல்லூர் அவர்கள், “எல்லோருக்கும் சொந்தம் நபிகள் நாயகம் (ஸல்) என்ற தலைப்பிலும் சிறப்புரையாற்றினார்கள்.
இந்நிகழ்ச்சி நிரலை ஒருங்கிணைப்பு செய்யப்பட்டு, மௌலானா அல்ஹாஃபிழ் இ.மீரான் முஹ்யித்தீன் ஆலிம் மன்பஈ அவர்கள், முதுவை நகர் உலமா மஜ்லிஸ் தலைவர் தொகுத்து வழங்கினார்.
நிறைவாக! மௌலானா ஏ.இப்ராஹிம் கனி மிஸ்வாஹி ஹஜரத் அவர்கள் நன்றியுரை கூற, மௌலானா யூ.எஸ்.அப்துல் ரஹீம் உலவி ஹஜ்ரத் அவர்கள் (இறைவனுக்கு நன்றி கூறி) துஆ செய்து,
நிகழ்வின் இறுதியாக “தேசிய கீதம் இசைக்கப்பட்டு” நிகழ்ச்சி நிறைவு செய்யப்பட்டது. இவ்விழாவில் முதுகுளத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பெருவாரியான அனைத்து சமுதாய பொதுமக்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.




