தமிழ்நாடு

மதுரை மன்னர் கல்லூரி மாணவர்களின் வாசிப்புத் திருவிழா (திறனாய்வு நூல்) மதிப்புரை

மதுரை மன்னர் கல்லூரி மாணவர்களின் வாசிப்புத் திருவிழா (திறனாய்வு நூல்) மதிப்புரை

31.12.2025 அன்று மதுரை  உலகத்தமிழ்ச் சங்கத்தில் 55 ஆவது நூல் அரங்கேற்றம் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு மதுரை உலகத்தமிழ் சங்கத் துணைத் தலைவர் மற்றும் இயக்குநர் முனைவர் இ.சா.பர்வீன் சுல்தானா தலைமை தாங்கினார்.
வாசிப்புத் திருவிழா என்னும் கட்டுரை நூலை மதுரை பட்டிமன்ற பேச்சாளர் திருமதி செள.சுகுமாரி செளவுண்டையன் மதிப்பரை செய்தார்கள். இந்நூலானது மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி இளங்கலை வணிகவியல் துறையைச் சேர்ந்த 49 மாணவர்களால் 49 நூல்கள் திறனாய்வு செய்து எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பாகும்.நூலின் தொகுப்பாசிரியர் மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் முனைவர் சே.முனியசாமி ஏற்புரை வழங்கினார்.

இந்நிகழ்வில் வாசிப்புத் திருவிழா உட்பட
வரலாற்று ஆய்வில் களப்பணிகள், காண்பண யாவுமாய், மெல்ல செத்து மீண்டும் வா முதலிய நூல்கள் மதிப்புரைச் செய்யப்பட்டன. மேலூர் அரசு கலை கல்லூரி வரலாற்றுத்துறை மாணவர்களும், பல்வேறு தமிழறிஞர்களும், தமிழ் ஆர்வலர்களும் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button