உலகம்வளைகுடா

துபாய் டிவைன் பிளாக் மஜ்லிசில் இணையவழி மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி

துபாய் டிவைன் பிளாக் மஜ்லிசில் இணையவழி மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி

துபாய் :

துபாய் டிவைன் பிளாக் மஜ்லிசின் சார்பில் இணையவழி மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி 56 வது முறையாக 08.04.2026 புதன்கிழமை மாலை  நடந்தது.

இந்த நிகழ்ச்சிக்கு டிவைன் பிளாக் மஜ்லிசின் முஹிப்புல் உலமா ஏ. முஹம்மது மஃரூப் தலைமை வகித்தார். தொடக்கமாக ஜலால் இறைவசனங்களை ஓதினார்.

அவர் தனது உரையில் அமீரகத்தில் நேரடியாக நடந்து வந்த டி பிளாக் மஜலிஸ் காலப்போக்கில் டிவைன் பிளாக் மஜ்லிஸ் என்ற பெயரில் தொடர்ந்து மார்க்க விளக்கங்களை வழங்க வேண்டும் என்ற நன்னோக்கத்தில் நடந்து வருகிறது. இதில் அனைவரும் பங்கேற்று பயன்பெற வேண்டும் என்றார்.

இந்த நிகழ்ச்சியில் ‘முன்மாதிரி முஃமின்களின் முகவரிகள் ” என்ற தலைப்பில் சென்னை, கோடம்பாக்கம் புலியூர் மஸ்ஜித், தலைமை இமாம், மௌலவி அல்ஹாஃபிழ் S,.M.S. முஹம்மது உமர் ரிழ்வானுல்லாஹ் ஸித்தீக்கி ஜமாலி சிறப்புரை நிகழ்த்தினார்.

கீழக்கரை அப்துல் உஃபூர் காக்கா, மௌலவி டி.எஸ்.ஏ. அபுதாஹிர் மஹ்லரி, கல்லிடைக்குறிச்சி முனைவர் ஆ. முகமது முகைதீன், அய்மான் சங்க துணைத் தலைவர் மீரான் ஃபைஜி, நிர்வாகச் செயலாளர் ஆடுதுறை முஹம்மது அப்துல் காதர், பரமக்குடி ஏ.எஸ்.இப்ராஹிம், முதுவை ஹிதாயத், இலங்கை மௌலவி அஹில் முஹம்மது, சென்னை புதுக்கல்லூரி பேராசிரியர் ஹெச். ஹிதாயத்துல்லா, அபுபக்கர், ஹாரித், கத்தார் சிக்கந்தர் உள்ளிட்ட பலர் பங்கேற்று சிறப்பித்தனர். துஆவுடன் நிகழ்ச்சி நிறைவடைந்தது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button