ரமலானை வரவேற்போம் நிகழ்ச்சி

இறைவன் அருளால் இந்தியன் நலவாழ்வு பேரவை – துபாய் மண்டலம் ஹோர் அல் அன்ஸ் கிளையில் சார்பாக 07-02-26 அன்று ரமலானை வரவேற்போம் நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் துபாய் மண்டல தலைவர் அய்யம்பேட்டை பாரூக் அவர்கள் தலைமை ஏற்று நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்கள். மார்க்க அறிஞர் நாசர் அலிகான், அமீரகத்தினுடைய தலைவர் அப்துல் ஹாதி அவர்களும் துணைத் தலைவர் A.S.இப்ராஹிம் அவர்களும் ரமலானின் மகத்துவத்தை கடைபிடிக்க வேண்டிய அமல்கள் குறித்து சிறப்புறையாற்றினார்கள. இந்நிகழ்வில் துபாய் மண்டல முன்னாள் தலைவர் வி களத்தூர் ஃபாருக் மண்டல செயலாளர் கீழை ஜெயினுலாப்தின் மண்டல பொருளாளர் அடியற்கை சேக்தாவூத் தத்துவாஞ்சேரி முஜிபுர் ரஹ்மான் மண்ணை அமீன் கடையநல்லூர் பாஷா மற்றும் லால்பேட்டை யாசிர் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் ஹோர்லென்ஸ் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்ச்சி ஏற்பாடுகளை
முத்துப்பேட்டை சாதிக் சேதுபாவாசத்திரம் சாகுல் துளசியாபட்டினம்அமீர் உள்ளிட்ட சகோதரர்கள் சிறப்பாக செய்திருந்தார்கள். ரமலானை பற்றிய தகவல்கள் மற்றும் இரவு உனவுடன் இனிதே நிகழ்ச்சி நிறைவு பெற்றது.
செய்தி மற்றும் தகவல்
பரமக்குடி A.S.Ibrahim




