இராமநாதபுரம்
காவேரி குடிநீர் கேட்டு தண்ணீர் வண்டிகளுடன் திடீர் சாலை மறியல்

காவேரி குடிநீர் கேட்டு தண்ணீர் வண்டிகளுடன் திடீர் சாலை மறியல்

இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி சமத்துவபுரத்தில் காவேரி குடிநீர்வேண்டி பொதுமக்கள் திடீரென பஸ்மறியலில் ஈடுபட்டனர். அப்பகுதி மக்கள் கூறியதாவது; எங்களுக்கு காவேரிதண்ணீர் வருவதில்லை கடலாடி யூனியன் அதிகாரியிடம் பலமுறை மனுகொடுத்தும் எந்தபதிலும் இல்லை என்பதால் நாங்கள் சாலைமறியலில் ஈடுபட்டோம் என்றார்.சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கடலாடி சார்பு ஆய்வாளர் பஸ்மறியல் செய்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதால் கலைந்து சென்றனர்.சிறிது நேரம் அப்பகுதி சற்று பரபரப்பாக காணப்பட்டது.




