உலகம்

இலங்கை மக்களுக்கு நிவாரண உதவி வழங்கிய கிரீன் குளோப் அமைப்பு

இலங்கை மக்களுக்கு நிவாரண உதவி வழங்கிய கிரீன் குளோப் அமைப்பு

துபாய் :

திட்வா புயல் (Cyclone Ditwah) நவம்பர் 2025 இறுதியில் இலங்கையைத் தாக்கி, வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவுகளை ஏற்படுத்தி, பலத்த சேதத்தை விளைவித்ததன் காரணமாக இலங்கையின் பல்வேறு மாகாணங்களில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்து பல வீடுகள் சேதமடைந்து மின்சாரம் மற்றும் தொலைத்தொடர்பு இணைப்புகள் துண்டிக்கப்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டதன் அடிப்படையில் ஐக்கிய அரபு அமீரக அரசின் ஏற்பாட்டில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான பேரிடர் உதவிகள் இலங்கைக்கு நேரடியாக சென்றடையும் விதமாக நிவாரணப் பொருட்களை அமீரகத்தில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் ஐக்கிய அரபு அமீரக அரசின் வாயிலாக நிவாரணக் களப்பணியில்  கிரீன் குளோப் சார்பாக அம்மக்களுக்கு தேவையான வீட்டு உபயோகப் பொருட்களை(சுமார் 4000 kg அளவுள்ள மழைக்காலங்களில் தேவைப்படும் அத்தியாவசிய பொருட்களை) நாம் கடந்த 18ஆம் தேதி  துபாயில் உள்ள இலங்கை தூதரகத்தில் தூதரக அதிகாரிகள்  முன்பு  ஒப்படைக்கப்பட்டது.

இதில் தூதரக அதிகாரிகள், கிரீன் குளோப் நிர்வாகிகள், தன்னார்வலர்கள் என அனைவரும் இதில் முனைப்புடன் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் இணைந்து  பங்களிப்பையும் ஒத்துழைப்பையும் வழங்கிய TEPA (அமீரக  தொழில்  முனைவோர் கூட்டமைப்பு) அமீரக தமிழ் குடும்ப நண்பர்கள், தமிழக வர்த்தக நண்பர்கள் மற்றும் தன்னார்வ அமைப்புகள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button