General News

துபாயில் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் முஸ்லிம் லீக் பதிப்பக அறக்கட்டளை நிர்வாகிக்கு வரவேற்பு

துபாய் : துபாயில் அமீரக காயிதெமில்லத் பேரவையின் சார்பில் காயிதெமில்லத் பேரவை சர்வதேச ஒருங்கிணைப்பாளரும், வேலூர் நாடளுமன்ற உறுப்பினருமான அல்ஹாஜ் எம். அப்துல் ரஹ்மான் மற்றும் முஸ்லிம் லீக் பதிப்பக அறக்கட்டளை நிர்வாகி மில்லத் இஸ்மாயில் ஆகியோருக்கு வரவேற்பு நிகழ்ச்சி 03.02.2012 வெள்ளிக்கிழமை காலை வரவேற்பு அளிக்கப்பட்டது.

வரவேற்பு நிகழ்ச்சிக்கு அமீரக காயிதெமில்லத் பேரவை தலைவர் குத்தாலம் ஏ லியாக்கத் அலி தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் ஏ. முஹம்மது தாஹா வரவேற்புரை நிகழ்த்தினார்.

அமீரக காயிதெமில்லத் பேரவையின் சார்பில் காயிதெமில்லத் பேரவை சர்வதேச ஒருங்கிணைப்பாளரும், வேலூர் நாடளுமன்ற உறுப்பினருமான அல்ஹாஜ் எம். அப்துல் ரஹ்மான் தனது ஏற்புரையில் முஸ்லிம் லீக் மேற்கொண்டு வரும் பணிகள் குறித்து விவரித்தார்.

முஸ்லிம் லீக் பதிப்பக அறக்கட்டளை நிர்வாகி மில்லத் இஸ்மாயில் தனது உரையில் பதிப்பக அறக்கட்டளையின் வெளியீடுகளான மணிச்சுடர் நாளிதழ், பிறைமேடை மாதமிருமுறை, இயக்க வெளியீடுகளின் விரிவாக்கப் பணிகள் குறித்தும் விவரித்தார்.

பொருளாளர் கீழக்கரை ஹமீதுர் ரஹ்மான் நன்றி கூறினார். நிகழ்விற்கான ஏற்பாடுகளை துபாய் மணடலச் செயலாளர் முதுவை ஹிதாயத் செய்திருந்தார். நிகழ்வில் அலீம், துங்கு, வானாதிராஜபுரம் ஜாபர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button