இராமநாதபுரம்

கீழக்கரையில் ரேபிஸ் நோய்தடுப்பூசி முகாம் நகராட்சி ஆணையாளர் தகவல்

கீழக்கரையில் ரேபிஸ் நோய்
தடுப்பூசி முகாம் நகராட்சி ஆணையாளர் தகவல்

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சுற்றித்திரியும் தெரு நாய்களுக்கு ரேபிஸ் நோய் வராமல் தடுக்கும் பொருட்டு தடுப்பூசி முகாம் மே,19 முதல் நடைபெறுகிறது என நகராட்சி ஆணையாளர் ரங்கநாயகி தெரிவித்துள்ளார். நகர் மன்ற தலைவர் செஹானாஸ் ஆபிதா,
துணை தலைவர் ஹமீது சுல்தான் மற்றும் மண்டல இணை இயக்குனர் கால்நடை பராமரிப்பு துறை மருத்துவர் ரவிச்சந்திரன் ஆகியோர் ரேபிஸ் நோய் தடுப்பூசி முகாமை துவங்கி வைத்தனர், மருத்துவர் லீலாவதி தெரு நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தினர், உடன் சுகாதார ஆய்வாளர் பரகத்துல்லா மற்றும் நகராட்சி ஊழியர்கள் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை பணியாளர்கள் உடன் இருந்தனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button