கவிதைகள் (All)

உடன்பாடு!

உடன்பாடு!
++++++////+++++

கொக்குகள் நிற்பது காவலுக்கல்ல..
குருவிகள் பறப்பது கூலிக்கும் அல்ல
கன்றுகள் கத்துதல் சண்டைக்கு அல்ல
காளான் நிற்பது உயரத்திற் கல்ல..
நண்டுகள் வலையில் பிச்சைக்கு அல்ல..
நாய்கள் நடப்பது ஓய்வுக்கு அல்ல
புலியம் நரியும் பாசத்திற் கல்ல..
பூசணி பூப்பது அழகிற்கு அல்ல..
அலைகள் புரள்வது காட்சிக்கு அல்ல..
ஆமைகள் நடப்பது பார்ப்பதற்கு அல்ல..
எல்லாம் எல்லாம் ஒருவகை வேலை..
எந்த வேலையும் இல்லாமல் வருமா நாளை?
நாளை என்பதும் செய்யவே வேலை..
நமக்கு கவலை யென்பதும் சொல்லுதற் கல்ல..
வண்டுகள் பாடுதல் கேட்பதற் கல்ல
வாழைகள் பழுப்பது விழுவதற் கல்ல
வாலில் குரங்கு தொங்குவதற் கல்ல..
ஆலையில் கரும்பு அழுவதற்கல்ல..
ஆசையில்லாது பிழைப்பதற் கல்ல..
நாம்தான் இங்கே பிரித்து பிரித்து
நலமும் வேலையும் வகுத்து வகுத்து
உணவும் செயலும் பகுத்து பகுத்து
உழைப்பும் பிழைப்பும் நடத்த நடத்தி..
இருப்பதும் கிடப்பதும் கழித்து கழித்து
இருக்கின்ற உலகத்தை அழித்து.. அழித்து..
தனித்து தனித்து தகர்த்து தகர்த்து..
எல்லாம் நமக்கே எனவே நினைத்து..
இருப்பதே ஒருவகை முரண்பாடு..
இதிலும் உண்டு உறங்கா உடன்பாடு!

பாவலர் மு இராமச்சந்திரன்
தலைவர். தமிழர் தன்னுரிமைக் கட்சி.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button