கவிதைகள் (All)

உலக தந்தையர் தினம்

உலக தந்தையர் தினம்- 15.06.2025

தாயுடன் சேர்ந்து நம்மை இந்த 

தரணிக்குத் தந்தவர்   தந்தை. 

உயிரணு தந்தவர் தந்தை – நமது 

உயர்வுக்கு உழைப்பவர் தந்தை 

உணர்வினில் நமக்கு  ஒழுக்கமதை 

ஊட்டி வளர்ப்பவர்  தந்தை . 

அறிவை வளர்ப்பவர் தந்தை – மனதில் 

அன்பை வளர்ப்பவர் தந்தை .

சோதனைகளைத் தாங்கி நம்மை 

சாதனையாளனாக்கிடும் தந்தை.

வேதனைகளை  மறைத்து நம்மை 

வெற்றியாளனாக்குபவர் தந்தை . 

முந்தைய தலைமுறை  என்ற முறையில் 

முன்னுதாரணமானவர் தந்தை. -நம் 

முன்னேற்றம் ஒன்றே  குறிக்கோளாகக் கொண்டு 

முனைந்து உழைப்பவர் தந்தை . 

அன்பை  விதைப்பவள் அன்னை – உலக 

அறிவைக் கொடுப்பவர் தந்தை .

பண்பை வளர்ப்பவன் அன்னை -நமக்கு 

பண்பாட்டை கற்றுக்கொடுப்பவர் தந்தை. 

செல்லம் கொடுப்பவள் அன்னை – நம்மை 

செல்வந்தனாக்க உழைப்பவர் தந்தை. 

கண்டித்து வளர்ப்பவன் அன்னை – தவறை 

தண்டித்து திருத்த முனைபவர் தந்தை. 

அனைத்து விதமான ஆசைகளடக்கி , 

அனைத்தையும் தியாகம் செய்பவர் தந்தை .

அவையில் முந்தியிருக்கச் செய்பவர் தந்தை . 

அவையடக்கமும் சொல்லித்தருபவர் தந்தை   

 தந்தை என்பதன் பொருள் யாதெனில் – அனைத்தும் 

தந்து  நம்மை  வளர்ப்பதனால்தானே  அவரை  , 

 தந்தை என்று  அழைக்கின்றோம்  -இதை 

சிந்தையில்  வைத்து தினம்  அவரை  

சிரம் தாழ்த்தி  வணங்கிடுவோம். .  

அன்பு மகன் , 

சிலேடை சித்தர் சேது சுப்ரமணியம் 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button