கவிதைகள் (All)

என் கண்ணீரையும் சேர்த்து…

ஏற்றம் இறக்கம்
இழுக்க முடியா சுமை…
கழுத்தில் வலி, காலில் நடுக்கம்
எல்லாம் பொறுத்து
கடக்க முயலும் நேரத்தில்…

சாட்டை எடுத்து
முதுகில் பாய்த்து
கூட்டல் கழித்தலின் குறிப்புணர்த்தி
அதன்நடுவே
ஊசிமுனைக் குச்சியால் புள்ளியிட்டு…

அப்பப்பா…தாங்கமுடியா துயர்நடுவே
பாரத்தின் எல்லையடைந்து
திரும்பி வருகையில்…
கடன் சொல்லி வாங்கிய
தீவனமும் புண்ணாக்கும்
பாதி பசியணைக்க…

வண்டியுடன் கட்டிவிட்டு
வஞ்சியுடன் அவனிருக்க…
கால்வயிற்று கஞ்சியுடன்
கடுங்குளிரில் நானிருக்க…
அடித்து பெய்தமழை ஆறாய் ஓடியது….
என் கண்ணீரையும் சேர்த்து…

Balaji

youth vikatan

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button