சென்னைப் பல்கலைக்கழகத்தில் நூல் அறிமுக விழா

சென்னைப் பல்கலைக்கழகத்தில் நூல் அறிமுக விழா

சென்னைப் பல்கலைக்கழகத்தில் சைவ சித்தாந்தத் துறை சார்பில் சிறப்பான முறையில் ஆன்மிகத் தளத்தில் புரட்சியாளர்கள் நூல் அறிமுக விழாபேராசிரியர் பெ அர்த்தனாரீஸ்வரர் தலைமையில் நடைபெற்றது.
தாகூர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி உதவிப் பேராசிரியர் தமிழ்த் துறை தலைவர்
பெ அண்ணாதுரை வரவேற்புரை வழங்கினார்.
தொல்லியல் ஆய்வுத்துறை மாணவர்கள் மத்தியில் நடைபெற்ற இந்த நிகழ்வில் சைவ சித்தாந்தத் துறையின் தலைவர் பேராசிரியர் நல்லூர் சா சரவணன் அவர்கள் சிறப்புரையாற்றினார்.
சைவ சித்தாந்தத்துறை சென்னை பல்கலைக்கழகம் சார்பில் முனைவர் நாராயணன் அவர்களும்,
திருச்செங்கோடு
அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின், தமிழ்த் துறை தலைவர் முனைவர் மா வசந்தகுமாரி ( நாமக்கல் மாவட்ட செயலாளர் த க இ பெருமன்றம்) ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
நூலாசிரியர் நீசு பெருமாள் ஏற்புரை வழங்கினார்.
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் சென்னை மாவட்டச் செயலாளர் பேராசிரியர் கணபதி இளங்கோ சிறப்பான முறையில் இந்த நிகழ்வினை ஏற்பாடு செய்து தொகுத்து வழங்கினார்.






