இராமநாதபுரம்

கடலாடி அருகே கோவில் திருவிழாவையொட்டி மாட்டுவண்டி பந்தயம் 27 வண்டிகள் பங்கேற்பு

கடலாடி அருகே கோவில் திருவிழாவையொட்டி மாட்டுவண்டி பந்தயம் 27 வண்டிகள் பங்கேற்பு

கடலாடி :

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகேயுள்ள ஆப்பநாட்டின் தலைநகரமான திரு.ஆப்பனூர் கிராமத்தில் ஸ்ரீஅரியநாயகி அம்மன் கோவில் மாசா முளைப்பாரி திருவிழாவை முன்னிட்டு இரு பிரிவுகளாக மாட்டுவண்டி பந்தயம் நடத்தப்பட்டது

பெரியமாடு பந்தயத்தில் 9 மாட்டு வண்டிகள் பங்கேற்று இந்தப் போட்டிக்கு 12 கிலோ மீட்டர் தூரம் இலக்கு நிர்ணயிக்கப்பட்டும், சின்ன மாடு பந்தயத்தில் 18 மாட்டு வண்டிகள் பங்கேற்று சின்ன மாடு பந்தயத்திற்கு 10 கிலோ மீட்டர் இலக்காக நிர்ணயிக்கப்பட்டு மொத்தம் 27 ஜோடி மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன.

முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களை பிடித்த மாடுகளுக்கும் சாரதிகளுக்கும் ரொக்கப்பரிசு மற்றும் நினைவுப் பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது.

சாயல்குடி முதுகுளத்தூர் சாலையில் இரண்டு பிரிவுகளாக நடத்தப்பட்ட இந்த மாட்டு வண்டி ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் மற்றும் தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து மாட்டுவண்டிகள் பங்கேற்றன.

இந்த மாட்டு வண்டி போட்டியை காண கடலாடி, முதுகுளத்தூர் மற்றும் சாயல்குடி உள்ளிட்ட மாவட்டத்தின் பகுதிகளில் இருந்து ஏராளமான பார்வையாளர்கள் வந்திருந்து கண்டு ரசித்தனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button