இராமநாதபுரம்

பரமக்குடி கிளை நூலகத்தில் கொடையாளர்களாக இணைத்துக் கொண்ட துபாய் தமிழர்கள்

பரமக்குடி கிளை நூலகத்தில் கொடையாளர்களாக இணைத்துக் கொண்ட துபாய் தமிழர்கள்

பரமக்குடி :

பரமக்குடி முழு நேர கிளை நூலகத்தில் துபாயில் செயல்பட்டு வரும் அல் ரீம் குழுமத்தின் மேலாண்மை இயக்குநர் இளையான்குடி ஆர். செய்யது அபுதாஹிர், துபாய் ஊடகவியலாளர் முதுவை ஹிதாயத் ஆகிய இருவரும் தலா ரூ. 10,000 நூலகத்திற்கு வழங்கி தங்களை கொடையாளராக இணைத்துக்கொண்டனர்.

மேலும் பரமக்குடி இக்றா பதிப்பகத்தின் எம். ஆமினா முஹம்மத்  ஐந்து புதிய நூல்களை நூலகத்திற்கு இலவசமாக வழங்கினார்

நன்கொடைகளை இராமநாதபுரம் மாவட்ட நூலக அலுவலர்  மு.ப.கார்ல் மார்க்ஸ் , நூலகர்  கோ. சண்முகவேலு, வாசகர் வட்ட தலைவர் வே.

இராஜேந்திரன் ஆகியோர் துபாய், ஊடகவியலாளர் முதுவை ஹிதாயத் இடம் பெற்றுக் கொண்டனர்.

நூலக பணியாளர்கள் க. இறையருட்பிரகாஷ், ந. ஐஸ்வர்யா உள்ளிட்ட பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button