தீரன் ஸ்மித் மச்சாருக்கு வாழ்த்துக்கள்.

தீரன் திரு. ஸ்மித் மச்சாருக்கு பாராட்டுக்களும், வாழ்த்துகளும் ,
நன்றிகளும்.
நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானத்தில்
கெடுமதி கொண்ட துணை விமானி
ஒருவன்
திடுமென ஆயுதம் ஏந்தி தலைமை விமானியை
கொடூரமாய்த் தாக்கினான் கொலை வெறி கொண்டு.
தடுமாறி விழுந்த போதும் , தன்னிலை மறவாத விமானி
உடனடியாக கதவைத் திறந்தார்.
உதவிக்கு வந்தனர் பலரும்.
விமானத்தை நிலைநிறுத்தி – காயமுற்ற
விமானிக்கும் முதலுதவி செய்து,
தாக்கியவனையும் கட்டிப் போட்டு
தரையிறக்கினர் சவுதி அரேபியா நாட்டில்.
காற்றில் பறந்த விமானத்தில் பயணம் செய்த
நூற்று எண்பது பயணிகள் உயிரை
கூற்றுவன் கையிலிருந்து காப்பாற்ற கடமை
ஆற்றினார் ஸ்மித் மோச்சார்,
போற்றுவோம் அவர்தம் செயலை.
தன்னுயிர் ஆபத்தில் இருந்த நிலையிலும்,
தன் பொறுப்பில் இருந்த இன்னுயிர்களைக் காக்க,
தன் மதி கொண்டு தைரியமாக செயல்பட்ட
இந்திய விமானி மோச்சார் செயலை
அகிலம் முழுவதும் போற்றிப் புகழ்ந்து.
இந்திய நாட்டின் பெருமை உயர்ந்தது.
விரைந்து செயல்பட்டு, வீரச் செயல் புரிந்த மோச்சார்
விரைந்து குணமடைய, இறைவனிடம் பிரார்த்திக்கிறோம்.
வணக்கத்துடன்,
சிலேடை சித்தர் சேது சுப்பிரமணியம்.
2.10.2026.