இராமநாதபுரம்

திருவாடானை அருகே 2 தனித்தனி சாலை விபத்து : 2 பேர் பரிதாபமாக உயிரிழப்பு

திருவாடானை அருகே 2 தனித்தனி சாலை விபத்து
2 பேர் பரிதாபமாக உயிரிழப்பு

இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே நிகழ்ந்த இரு வேறு சாலை விபத்துகளில் 2 பேர் உயிரிழந்தனர்
கருமொழி அருகே
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை தாலுகா, தெற்கு செய்யானேந்தல் கிராமத்தை சேர்ந்த சிலுவை முத்து திருச்சி-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் திருவாடானை நோக்கி சென்று கொண்டிருந்தார்.
கருமொழி அருகே எதிரே வந்த வேன் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
சின்ன கீரமங்கலம் அருகே
ஸ்ரீ கிலியூர் கிராமத்தை சேர்ந்த மணியின் மகன் சுரேஷ் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது வத்தப்பட்டியை சேர்ந்த வீரமுத்துவின் மகன் ராஜேந்திரன் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் அதிவேகமாக மோதியது.
படுகாயமடைந்த சுரேஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
காவல்துறை நடவடிக்கை இரு விபத்துகள் குறித்தும் திருவாடானை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இரவு நேரத்தில் நடந்த இந்த விபத்துகளை தொடர்ந்து அப்பகுதியில் பொதுமக்கள் கூடி பரபரப்பு ஏற்பட்டது. காயமடைந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button