இராமநாதபுரம்

வாலிநோக்கம் கடற்கரையில் வாலிபர்பிணம் போலீசார் விசாரணை .

வாலிநோக்கம் கடற்கரையில் வாலிபர்பிணம் போலீசார் விசாரணை .

ராமநாதபுரம் .

ராமநாதபுரம் மாவட்டம், வாலிநோக்கம் கடற்கரை அருகே உள்ள கல்முனை பகுதியில் காலையில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் சடலம் கரை ஒதுங்கிய நிலையில் கிடந்தது. அப்பகுதிக்கு மீன்பிடி மற்றும் நடைப்பயிற்சிக்காக சென்ற பொதுமக்கள் சடலத்தை கண்டு அதிர்ச்சி அடைந்து, உடனடியாக வாலிநோக்கம் மரைன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மரைன் போலீசார், சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். உயிரிழந்த நபர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து இதுவரை உறுதி செய்யப்படவில்லை.
முதற்கட்ட விசாரணையில், உயிரிழந்தவர் கடலில் குளிக்கச் சென்றபோது நீரில் மூழ்கி உயிரிழந்தாரா, அல்லது மீன்பிடிக்கச் சென்றபோது கடலில் தவறி விழுந்தாரா, வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அருகிலுள்ள காவல் நிலையங்களில் காணாமல் போனோர் குறித்த புகார்களையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button