அபுதாபியில் அமீரக அதிபர் குறித்த ஹிந்தி மொழி நூல் வெளியீடு

அபுதாபியில் அமீரக அதிபர் குறித்த ஹிந்தி மொழி நூல் வெளியீடு

அபுதாபி :
அபுதாபி, இந்தியன் இஸ்லாமிக் செண்டரில் அமீரக அதிபர் மேதகு ஷேக் முஹம்மது பின் ஜாயித் அல் நஹ்யான் குறித்து பேராசிரியர் டாக்டர் ஜமால் சனத் அல் சுவைதியின் ஹிந்தி மொழி நூல் வெளியீட்டு விழா நடந்தது.
இந்த விழாவில் அமீரக சகிப்புத்தன்மை மற்றும் சகவாழ்வுத்துறை மந்திரி ஷேக் நஹ்யான் பின் முபாரக் அல் நஹ்யான் பங்கேற்று நூலை வெளியீட்டார்.
விழாவில் அமீரகத்துக்கான இந்திய தூதர் டாக்டர் தீபக் மிட்டல், லூலூ குழுமத்தின் மேலாண்மை இயக்குநர் எம்.ஏ. யூசுப் அலி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.
அமீரக அதிபர் மனிதகுலத்துக்கு ஆற்றி வரும் சிறப்பான பணிகளை வெளிப்படுத்தும் வகையில் இந்த நூல் அமைந்துள்ளது.
இந்த நூல் ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன் மற்றும் ஸ்பானிஷ் உள்ளிட்ட மொழிகளில் ஏற்கனவே மொழி பெயர்க்கப்பட்டு சிறப்பான வரவேற்பை பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
ஹிந்தி மொழி நூல் இந்தியாவைச் சேர்ந்த பொதுமக்களிடம் அதிக வரவேற்பை பெறும் என்பது சிறப்பானது.
இந்திய தூதர் டாக்டர் தீபக் மிட்டல், இந்தியா மற்றும் அமீரகம் இடையே சிறப்பான நல்லுறவு இருந்து வருகிறது.
இதனை வெளிப்படுத்தும் வகையில் இந்த நூல் வெளியிடப்பட்டுள்ளது என்றார்.






