உலகம்

கத்தார் மண்ணில் தமிழர் ஒற்றுமையின் மகத்தான அடையாளம் – ஒருங்கிணைந்த தமிழர் பேரவையின் 7ஆம் ஆண்டு விழா கோலாகலம்

கத்தார் மண்ணில் தமிழர் ஒற்றுமையின் மகத்தான அடையாளம் – ஒருங்கிணைந்த தமிழர் பேரவையின் 7ஆம் ஆண்டு விழா கோலாகலம்

தோஹா : 
கத்தார் ஒருங்கிணைந்த தமிழர் பேரவை அமைப்பின் ஏழாம் ஆண்டு துவக்க விழா, கத்தார் மண்ணில் தமிழர் ஒற்றுமை, பண்பாடு மற்றும் சமூக சேவைகளை வெளிப்படுத்தும் வகையில் மிகச் சிறப்பாகவும் கோலாகலமாகவும் நடைபெற்றது.

இந்த விழா, ஒருங்கிணைந்த தமிழர் பேரவை தலைவர் திரு. வலியுல்லாஹ் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக இந்திய தூதரகத்தின் Shri Eish Singhal, First Secretary (Labour & Community Welfare, Visa and OCI) அவர்கள் கலந்து கொண்டு, கத்தாரில் வாழும் தமிழர்களின் சமூக பங்களிப்பையும் ஒருங்கிணைந்த தமிழர் பேரவையின் சேவைகளையும் மனமார பாராட்டினார்.

மேலும், அயலகத் தமிழர் நலவாரிய கமிஷனர் அய்யா திரு. Dr. M. Vallalar, IAS, Commissioner – Non Resident Tamils Welfare Board அவர்கள் விழாவில் கலந்து கொண்டு, வெளிநாடுகளில் வாழும் தமிழர்களின் நலனுக்காக அரசு மேற்கொண்டு வரும் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்து விளக்கினார்.

இந்த நிகழ்ச்சியில் Mr. Pughal Gandhi, Senior Advocate & Board Member, NRT Welfare Board அவர்கள் கலந்துகொண்டு, கடந்த ஏழு ஆண்டுகளாக ஒருங்கிணைந்த தமிழர் பேரவை சமூக நலன், மொழி வளர்ச்சி மற்றும் கலாச்சார பாதுகாப்பு ஆகிய துறைகளில் செய்துவரும் சேவைகளை நினைவுகூர்ந்து வாழ்த்துரை வழங்கினார்.

தமிழ் இலக்கியத்தின் பெருமையை உலக அரங்கில் எடுத்துச் செல்லும் வகையில், திருக்குறளை தமிழிலிருந்து அரபிக்கு நேரடியாக மொழிபெயர்த்த முதல் அறிஞரான பேராசிரியர் Dr. Jahir Hussain, First-ever direct translator of Thirukkural from Tamil to Arabic அவர்கள், தமிழின் உலகளாவிய தன்மையும் அதன் தத்துவ ஆழமும் குறித்து உரையாற்றினார்.

நிகழ்ச்சியில், பிரபல மாயாஜாலக் கலைஞர் Mr. Viki Krish, Professional Magician & Performer அவர்களின் கலை நிகழ்ச்சி பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தது. இதனுடன் பல்வேறு முக்கிய விருந்தினர்கள், சமூக தலைவர்கள் மற்றும் தமிழ்சமூக பிரதிநிதிகள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

விழாவின் இறுதியில், ஒருங்கிணைந்த தமிழர் பேரவை கடந்த ஏழு ஆண்டுகளாக கத்தாரில் ஆற்றி வரும் தொடர்ச்சியான சமூக சேவைகள், தமிழர் நலப் பணிகள் மற்றும் கலாச்சார முயற்சிகள் நினைவுகூரப்பட்டு, பேரவையின் எதிர்கால பணிகளுக்கு அனைவரும் வாழ்த்துகள் தெரிவித்தனர்.

இந்த ஏழாம் ஆண்டு விழா, கத்தார் தமிழர்களின் ஒற்றுமை, உறுதி மற்றும் சமூக பொறுப்புணர்வை எடுத்துக் காட்டும் ஒரு நினைவுகூரத்தக்க நிகழ்வாக அமைந்தது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button