கவிதைகள் (All)
விதையே…
விதையே…
மண்ணை
நேசித்து பார்
மகத்துவமான
பயிர்
கிடைக்கும்.
தரியே.,.
நூலை
நேசித்து பார்
நுட்பமான
ஆடை பிறக்கும்.
பூவே…
நாரை
நேசித்து பார்
நேர்த்தியான
மாலை பிறக்கும்.
வேரே…
நீரை
நேசித்து பார்
நிழல் தரும்
மரம் கிடைக்கும்.
என்னவளே…
என்னை
நேசித்து பார்.
உன்னுள்
என்
உயிரும் பிறக்கும்
நல்
உணர்வும் கிடைக்கும்.
அரும்பு கவி…