சுற்றுச்சூழல் பாதுகாப்பு முன்னெடுப்பு: கீழக்கரை பள்ளியில் மலபார் கோல்டு சார்பில் மரக்கன்று நடும் விழா

சுற்றுச்சூழல் பாதுகாப்பு முன்னெடுப்பு: கீழக்கரை பள்ளியில் மலபார் கோல்டு சார்பில் மரக்கன்று நடும் விழா

கீழக்கரை ஜுன்,6
சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி இராமநாதபுரம் மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ் நிறுவனம் சார்பில் கீழக்கரை ஹமீதியா ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
மலபார் குழுமத்தின் சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்நிகழ்வில் தலைமை உரை உதவி தலைமை ஆசிரியர் தஸ்தகீர், வரவேற்புரை தமிழ் ஆசிரியர் அப்பாஸ் மந்திரி, விழிப்புணர்வு உறுதிமொழி ஓவிய ஆசிரியர் தக்கலை பீர்முகமது, கணித ஆசிரியர் நிஜாமுதீன் நன்றியுரையாற்றினார், ஆசிரியர்கள் , பள்ளி மாணவர்கள்,மற்றும் மலபார் கோல்டு நிறுவன ஊழியர்கள் இணைந்து வளாகத்தில் மா, புங்கை, வேம்பு உள்ளிட்ட பல்வேறு வகையான மரக்கன்றுகளை நட்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய நிறுவன பிரதிநிதிகள், “அதிகரித்து வரும் வெப்பநிலை மற்றும் சுற்றுச்சூழல் சீர்கேட்டை தடுக்க மரம் நடுவது அவசியம். மாணவர்கள் ஒவ்வொருவரும் ஒரு மரமாவது நட்டு பராமரிக்க வேண்டும்” என வலியுறுத்தினர்.மாணவர்களுக்கு மரங்களின் முக்கியத்துவம், பராமரிப்பு முறைகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சி ஏற்பாட்டினை உடற்கல்வி ஆசிரியர் செய்து சலீம், தாருல் அன்சாரி சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்,




