கவிதைகள் (All)
எது இன்பம்…
எது இன்பம்…
~~~~
மகிழ்ச்சியை
தேடி
மன்றாடும்
மனிதா…
மதுவில்
கிடைப்பது
மகிழ்ச்சியா…
இல்லை.
மாதுவின்
மடியில்
மகிழ்ச்சியா…
இல்லவே இல்லை.
சூதுவின்
சூழ்ச்சியில்
மகிழ்ச்சியா…
இந்த
சூட்சமம்
தெரியாமல்
அலைகின்றோம்.
இமை
மூடும் நேரத்தில்
இறை அழைப்பு
வந்தால்
இன்பம்
தோன்றுமோ…
வாழும்
காலத்தில்
வாய்மையுடன்
வாழ்ந்தால்
வறுமை
தோன்றுமோ.
வாரிசுகளுக்கு
சேர்க்கும்
வழக்கத்தை
விட்டொழித்து…
ஈகையின்
பாதையில்
இசைந்தாலே
இன்பம்.
இல்லாளின்
இன்முகம்
இவ்வுலகில்
இன்பம்.
மழலையின்
மொழிகேட்டு
மகிழ்வது
இன்பம்.
மற்றோரின்
துன்பத்தை
மாற்றுவதும்
இன்பம்.
இறைவனை
நினைத்து
இன் செய்தல்
இன்பம்.
அன்புடன்
அன்வர் உசேன்
அஜந்தா டெக்ஸ்டைல்ஸ்
ராமநாதபுரம்.