பஹ்ரைனில் தமிழக மாணவர்கள்

பஹ்ரைனில் தமிழக மாணவர்கள்
பஹ்ரைன் :

நான் முதல்வன் திட்டத்தின் மூலம், தமிழ்நாட்டின் பல்வேறு கல்லூரிகளில் இருந்து 20 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு பஹ்ரைனுக்கு வந்திருந்தனர்.
ஆர் ஸ்கொயர் நிறுவனத்தின் சார்பில் சாந்தினி ராஜா ரஹமத்துல்லா மற்றும் அவரது கணவர் ராஜா ரஹமத்துல்லா ஆகியோர் மாணவர்களை பஹ்ரைனில் நேரில் சந்தித்தனர். அப்போது தற்போதைய வேலை வாய்ப்புகள் குறித்து தகவல்களை பகிர்ந்து கொண்டனர். மேலும், மத்திய கிழக்கு நாடுகளின் வேலைவாய்ப்பு சந்தையில் உள்ள எதிர்பார்ப்புகள் பற்றி விரிவாக எடுத்துரைத்தனர்.
இவ்வமர்வு மாணவர்களின் உலகளாவிய தொழில் வாய்ப்புகளை மேம்படுத்த உதவும் வகையில் பயனுள்ள மற்றும் தகவல் நிறைந்ததாக அமைந்தது. மாணவர்களின் முயற்சி மற்றும் கடின உழைப்பை பாராட்டும் விதமாக, பஹ்ரைனில் ஆர் ஸ்கொயர் நிறுவனத்தின் சார்பில் சிறப்பு நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.





