இராமநாதபுரம்

பரமக்குடியில் நடைபெற்ற மாபெரும் இரத்ததான முகாம்

இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு
பரமக்குடியில் நடைபெற்ற மாபெரும் இரத்ததான முகாம்!

இந்திய திருநாட்டின் 77- வது குடியரசு தின விழா நாடு முழுவதும் கொண்டாடி வரும் நிலையில் பரமக்குடி மெழுகுவர்த்தி நண்பர்கள் பவுண்டேஷன் மற்றும் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை இணைந்து மாபெரும் இரத்ததான முகாம் நடத்தினர்.

பரமக்குடி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவ அலுவலர், மருத்துவர் முத்தரசன் முகாமை துவக்கி வைத்ததோடு; தானும் இரத்த தானம் வழங்கினார்.

மயக்கவியல் மருத்துவர் பாலசுப்பிரமணியம், மெழுகுவர்த்தி நண்பர்கள் பவுண்டேஷன் நிறுவனர் முத்துக்குமார், செயல் இயக்குனர் மாரியம்மாள் பாண்டியன், சமூக ஆர்வலர் மரம்.முருகேசன், திருப்பதி செவிலியர் கண்காணிப்பாளர் உமா, அலமேலு மங்கை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மருத்துவர்கள், மருத்துவமனை பணியாளர்கள், காவல்துறையினர், இளைஞர்கள் என 35-க்கும் மேற்பட்டோர் இரத்ததானம் வழங்கினர். அவர்களுக்கான பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

வருகை தந்த அனைவரையும் வரவேற்று பீனிக்ஸ் பவுண்டேசன் ஒருங்கிணைப்பாளர் வசந்த் நன்றி கூறினார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button