முதுகுளத்தூரில் அமமுக சார்பில் எம்ஜிஆர் நினைவு தினம் அனுசரிப்பு

முதுகுளத்தூரில் அமமுக சார்பில் எம்ஜிஆர் நினைவு தினம் அனுசரிப்பு

இராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூரில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன், மற்றும் இராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர். முருகன் ஆகியோர் ஆணைக்கிணங்க தமிழக முன்னாள் முதல்வர் டாக்டர். எம்ஜிஆர் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு முதுகுளத்தூர் பேருந்து நிலையம் அருகே அலங்கரித்து வைக்கப்பட்ட எம்ஜிஆர் திருஉருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட பொருளாளர் முனியசாமி, ஒன்றிய செயலாளர் சேதுபதி, முருகன், சரவணன், நகர் கழக செயலாளர், பேரூராட்சி கவுன்சிலர் கருப்பண்ணன், மாவட்ட அம்மா பேரவை இணை செயலாளர், ஜெயசிம்மன் கருணாகரன், மாவட்ட அம்மா பேரவை சுந்தரமூர்த்தி, கிழக்கு ஒன்றிய துணை செயலாளர் முத்துராமலிங்கம், அவைத்தலைவர் முனியசாமி மற்றும் கூரி, ராமபாண்டி, பால்மேலி, வழிவிட்டான், ராமர். சேவற்கொடியான், மதி, திருப்பதி, துரைராஜ், கருணாகரன், கண்ணன், நகர் மகளிர் அணி வசந்தா, தகவல் தொழில் நுட்ப பிரிவு குமார், மாவட்ட இளைஞர் அணி லிங்கநாதன், அமைப்புசாரா ஓட்டுநர் அணி பூமிநாதன், வீரபாண்டி மற்றும் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.




