General News

சென்னை கருத்தரங்கில் டாக்டர் அமீர் ஜஹான் பங்கேற்பு

 

சென்னை : சென்னையில் தேசிய சிந்தனையாளர் பேரவையின் சார்பில் 21.09.2010 செவ்வாய்க்கிழமை மாலை 5.30 மணிக்கு தேவ நேயப்பாவணர் நூலக அரங்கில் ’விடியலை நோக்கி’ எனும் தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.

 

கருத்தரங்கிற்கு தேசிய சிந்தனையாளர் பேரவை தலைவர் உ. நீலன் தலைமை வகித்தார். செயலாளர் ஏ. காந்தி வரவேற்புரை நிகழ்த்தினார்.

 

இக்கருத்தரங்கில் கடலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே.எஸ். அழகிரி, மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகனும், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினருமான கார்த்தி சிதம்பரம், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச்செயலாளரும், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினருமான முதுகுளத்தூர் டாக்டர் அ. அமீர் ஜஹான் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

 

நிகழ்வில் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button