கவிதைகள் (All)
தீண்டாமை அகல
தீண்டாமை அகல :
மெய்யதன் மீது தாழ்ந்தோர்
மெய்யது பட்டால் தீட்டென்று
மெய்க்குப் புறம்பாக மனதில்
பொய்யாக நினைப்போரே
மெய்யது வெறும் காற்றடைத்த
பையென்ற மெய்யதனை
மெய்ஞ்ஞானத்தால் அறிந்தால்
மெய் மீதுள்ள மாயை அகன்று
மெய்யால் அனுபவிக்கும் இன்பமெலாம்
மெய்யல்லவென்றுணர்வீரே.
மெய்யை மெய் தீண்டுதல் தீட்டல்லவென உணர்ந்து
மெய்யன்போடனைவரையும்
மெய்யணைத்துச் செல்வீரே.
அன்புடன்,
சிலேடை சித்தர் சேது சுப்பிரமணியம்