கவிதைகள் (All)
நானும் கவிஞனா.?
நானும் கவிஞனா.?
நம்பவில்லை நானும்
நாட்டுப்பண் இயற்றவில்லை
நாடறிந்த மொழிகளிலே
தமிழைத்தவிர
வேறெந்த மொழியேதும்
கற்றதில்லை.
நானும் கவிஞனா
நம்பவில்லை நானும்
வீறுகொண்ட
விவசாயம்
வீடு இழந்து நிற்கயிலே…
வாழ்க்கையை மேம்படுத்த
வணிகத்தை தேர்ந்தெடுத்த
நானும் கவிஞனா
நம்பவில்லை நானும்.?
அறிவார்ந்த
வார்த்தைகளை
அறிந்தவனும்
நான் இல்லை…
ஆன்றோர்
சபைதனிலே
ஆற்றிய உரை என்று
எதுவும் இல்லை…
நானும் கவிஞனா
நம்பவில்லை நானும்.?
நடைமுறை
வாழ்க்கைகளை
நாடறிந்த
வார்த்தைகளில்
நான் வடிக்கும்
வாக்கியமே…
கவிதையோ..?
அரும்புக்கவி அன்வர்.