கவிதைகள் (All)
வியவைத்துளி
வியவைத்துளி
காயுமுன்
ஊதியத்தை
கொடுத்து விட
வேண்டும் என்றார்
நபிகளார்.
உழைப்பின் சிறப்பை
உணர்ந்தவர்.
உயிரின் மதிப்பை
அறிந்தவர்.
தொண்டு பல செய்து
வாழ்ந்தவர்.
தொன்மை நபி
என்று பெயர்
பெற்றவர்.
இஸ்லாம் தழைக்க
காரணம் அவரே.
இதயம் மலர்ந்த
தூதரும் அவரே.
நபியின் வாழ்க்கை
நமக்கு பாடம்.
நாளும் உழைத்து
சிறப்பாய் வாழ்வோம்.
அரும்புக்கவி
அன்வர் உசேன்.
இராம்நாட்.
