கீழக்கரை எஸ் டி பி ஐ கட்சி நகர் செயற்குழு கூட்டம்

கீழக்கரை எஸ் டி பி ஐ கட்சி நகர் செயற்குழு கூட்டம்

இராமநாதபுரம் மாவட்டம் கிழக்கு எஸ் டி பி ஐ கட்சி கீழக்கரை நகர் சார்பில் செயற்குழு கூட்டம் நகர் தலைவர் ஜலீல் தலைமையில் நடைபெற்றது.சிறப்பு அழைப்பாளராக தொகுதி தலைவர்
பி எல் ஏ 2 பற்றி விவரித்தார்.
தொகுதி செயற்குழு உறுப்பினர் நசீர் உட்கட்டமைப்பு விரிவாக்கம் பற்றி இதில் பல்வேறு தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டது,
அதில் கீழக்கரை நகராட்சிக்கு உட்பட்ட புதிய பேருந்து நிலையம் செல்லும் சாலைகளை சீரமைக்க வேண்டும் என்று இந்த செயற்குழு கூட்டத்தின் வாயிலாக கேட்டுக் கொள்ளப்பட்டது .
மேலும் வேலைகள் நடைபெற்று வருவதால் அந்தப் பகுதிகளுக்கு பேருந்துகள் கடந்த ஒரு மாத காலமாக வராததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாய் வருகின்றனர், உடனடியாக அனைத்து பேருந்துகளையும் உள்ளே சென்று வருவதற்கு ஏதுவாக செயல்பட வேண்டும் என்று இந்த செயற்குழு கூட்டம் வாயிலாக கேட்டுக்கொண்டனர்.
கீழக்கரை முழுவதும் வெறி நாய்களால் தினம்தோறும் பள்ளி மாணவ மாணவிகள் அச்சத்துக்குள்ளாகின்றனர்
குறிப்பாக கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பதாக வெறி நாய் கடிக்கப்பட்டு கீழக்கரையில் சாலை தெருவை சார்ந்த எஸ்டிபிஐ கட்சியின் முன்னாள் இணை செயலாளர் சலீம் மகனார் முகமது ரையான் அவர்கள் இறந்த செய்தி கீழக்கரை அதிர்ச்சி உள்ளாகியது என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோன்று கடந்த சில நாட்களுக்கு முன்பு ராமநாதபுரம் அருகில் 17 வயது இளைஞர் வெறிநாயால் கடிக்கப்பட்டு ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்டு இறந்த செய்தி ராமநாதபுரத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது
உடனடியாக கீழக்கரை நகராட்சி நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் இதை கவனத்தில் கொண்டு தமிழக அரசு கருணை கொலை செய்யலாம் என்ற அறிவிப்பை வெளியிட்டு இருந்தது அதனை அடிப்படையில் கீழக்கரை நகராட்சி நிர்வாகம் துரிதமாக செயல்பட்டு கீழக்கரையில் மாணவ மாணவிகள் முதியோர்கள் மற்றும் பொதுமக்களை அச்சுறுத்தக்கூடிய வெறி நாய்களை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்று இந்த செயற்குழு கூட்டம் வாயிலாக கேட்டுக் கொண்டனர்.இந்த செயற்குழு கூட்டத்தில் புதிதாக செயலாளராக எஸ்.செய்யது அசஹாப் (எ) கீழை அஸ்ரப் தேர்வு செய்யப்பட்டார்கள்
இந்த நிகழ்வில் எஸ் டி பி ஐ கட்சியின் தொகுதி துணை தலைவர் தாஜுல் அமீன் அவர்கள், தொகுதி செயர்குழு உறுப்பினர் பக்ருதீன் மற்றும் நகர் துணை வர்கள் ஹாஜா அலாவுதீன் அவர்கள் மற்றும் பாரூக் இணைச் செயலாளர் ஹமீது பைசல், செயற்குழு உறுப்பினர்கள் கீழை அஸ்ரப், சுல்தான்,நதீர் ஆகியோர் கலந்து கொண்டனர்.




