கவிதைகள் (All)

புனித நவராத்திரி வாழ்த்துக்கள்

புனித நவராத்திரி வாழ்த்துக்கள்.

கல்வி , செல்வம், வீரம் இம்மூன்றும்

நல்வினையாற்றி நன்மை பெறவே

வெல்வதற்குரிய தேவைகளென்பதை 

சொல்லும் விதமாய் புரட்டாசியிலே

இல்லந்தோறும் கொண்டாடும் நவராத்திரியாம். 

மலைமகளைத் துதித்து 

மன உறுதி வேண்டுவோம்.

அலைமகளைத் துதித்து

செல்வ வளம் வேண்டுவோம்.

கலைமகளைத் துதித்து 

கல்வி அறிவு வேண்டுவோம்.

விஜயதசமியன்று வெற்றிக்கு 

வேண்டுவோம்.

நவமாய்க் கொலு வைத்து 

நவ , நவமாய் அலங்கரித்து,

நவராத்திரி ஒன்பது நாட்களும் 

நல்விதமாய் பூஜை செய்து 

பல்வித சுண்டல்கள் பாங்காக பரிமாறி,

ஆடல், பாடல்களால் அம்பாளை மகிழ்வித்து 

உற்றார், உறவினர்கள் கூடி உற்சாகமாய்க் கொண்டாடி

வற்றாத அருள் பெறவே 

வாய்த்ததிந்த வைபவமே. 

நவராத்திரி நாயகியர் அருளால் 

நாமும் வளம் பெறுவோம்.

நாடும் வளம் பெறட்டும். 

அன்புடன்,

சிலேடை சித்தர் சேது சுப்பிரமணியம்.

22.09.2025.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button