தமிழ்நாடு

புதிய பல் மருத்துவ சேவை நாகர்கோவில் பேயோடு ஜங்ஷனில் துவக்கம்

புதிய பல் மருத்துவ சேவை நாகர்கோவில் பேயோடு ஜங்ஷனில் துவக்கம் நாகர்கோவில் பேயோடு ஜங்ஷனில் டாக்டர். பெசன் ஜாஸ் சிகிச்சையளிக்கும் ஜே.டி பல் மருத்துவமனை பொதுமக்கள் வசதிக்காக திறக்கப்பட்டது. நாகர்கோவில் மையப் பகுதியில் இருந்து 10 கி.மீ தூரத்திலுள்ளது பேயோடு ஜங்ஷன். இது ஆசாரிப்பள்ளம், சாந்தபுரம், சரல், வெள்ளிச்சந்தை, ராஜாக்கமங்கலம், குருந்தன் கோடு, தோப்பூர் போன்ற பல பகுதிகளுக்கு மையப்பகுதியாகும் இங்குள்ள அப்பல்லோ பார்மஸி அருகே ஜே.டி பல் மருத்துவமனையை திருமதி. ஜாஸ்மீன் லதா வென்சுலால் தலைமையில் அருட்தந்தை ரொனால்டு ரெக்ஸ் திறந்து வைத்து ஆசி வழங்கினார்.

 நிகழ்ச்சிக்கு வருகை புரிந்தவர்களை டாக்டர். தமிழருவி வரவேற்றார். ப்ரிஜிட், பிரைட், பிராங்க்ளின், அந்தோணி ராஜா முன்னிலை வகித்தனர்.

 சோனா, ஜெயந்தி, ஜோஹானா, ஜோபீனா, பிரபா, சுனிதா குத்துவிளக்கேற்றினர்.

சாந்தி, முக்கூடல் பல் மருத்துவர் ஏகலைவன், நன்னன் நிகழ்ச்சிக்கு வருகை புரிந்தவர்களை உபசரித்தனர்.

 டாக்டர். பெசன் ஜாஸ் குழந்தைகள் மற்றும் முதியோர்களுக்கான பல் சிகிச்சைகளில் சிறப்பாக பேசப்படுபவர். மறைந்த ராமன் புதூர் டாக்டர். ரெக்ஸின் புதல்வர் தான் டாக்டர். பெசன் ஜாஸ். சமூக நல ஆர்வலர் வெங்காடம்பட்டி பூ. திருமாறனின் மருமகன் டாக்டர். பெசன் என்பது குறிப்பிடத்தக்கது.

 ஞாயிறு தவிர மற்ற நாட்களில் மருத்துவரை சந்திக்க 84384 00516 ல் அழைக்கலாம். பெரிய நகரங்களில் மக்களுக்கு கிடைக்கும் பல் மருத்துவ வசதி சாதாரண கிராமப் புற மக்களுக்கு கிடைக்க வேண்டும் என்பதே தமது சேவையின் நோக்கம் என மருத்துவர் பெசன் தெரிவித்தார். கடையம் சத்திரம், பாரதி பள்ளி ஓய்வு பெற்ற ஆசிரியர் ஈத்தாமொழி எஸ்.தாமோதரன் மேஜிக் நிகழ்ச்சி நடத்தினார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button