தமிழ்நாடு

நாகர்கோவிலில் புதிய பல் மருத்துவ மையம்

புதிய பல் மருத்துவ சேவை நாகர்கோவில் பேயோடு ஜங்ஷன் பகுதியில் நாகர்கோவில் பேயோடு ஜங்ஷன் பகுதியில் செப்டம்பர் 4ஆம் தேதி (வியாழக்கிழமை) காலை 10:30 மணிக்கு அந்தப் பகுதி மக்கள் வசதிக்காக புதிதாக பல் மருத்துவமனை துவக்கப்படுகிறது. “ஜே. டி பல் மருத்துவமனை” என்ற பெயரில் டாக்டர். பெசன்ட் ஜாஸ் இந்த சேவையை துவக்குகிறார். பேயோடு ஜங்ஷன் அப்பல்லோ பார்மஸி அருகில் எஸ்ஜேஏ காம்ப்ளக்ஸ் கட்டிடத்தில் ஜே.டி பல் மருத்துவமனை திறக்கப்படவுள்ளது.

 பல் அடைத்தல், பல் கறை நீக்குதல், பற்களை வெண்மையாக்குதல், சொத்தைப் பற்களை அகற்றுதல், பல் கட்டுதல், வேர் சிகிச்சை, பல் கிளிப் பொருத்துதல், இன் பிளாண்ட் சிகிச்சை, குழந்தைகளுக்கு சிகிச்சை, பல் பராமரிப்பு ஆலோசனைகள் என வாரத்தில் ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற ஆறு நாட்களிலும் மருத்துவ சேவை உண்டென டாக்டர். பெசன் ஜாஸ் தெரிவித்தார். காலை 11:30 மணியிலிருந்து மதியம் 2:00 மணி வரையும் மாலை 4:00 மணி முதல் மாலை 7:00 மணி வரையும் ஜேடி பல் கிளினிக்கில் நோயாளிகள் கவனிக்கப்படுவார்கள். 84384 00516 என்ற கைபேசியில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

 ஜே.டி பல் மருத்துவமனை திறப்பு விழாவில் ஜாஸ்மின் ரெக்ஸ், டாக்டர். தமிழ் அருவி, சோனா, பிராங்க்ளின், சாந்தி திருமாறன், டாக்டர். ஏகலைவன், நன்னன் கலந்து கொள்கின்றனர்.

“பல்லும் போகாது – சொல்லும் போகாது” என்ற வித்தியாசமான அறிவிப்பு அந்தப் பகுதி மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது. ஏற்கனவே பல் மருத்துவர் பெசன் ஜாஸ் நாகர்கோவில் ராமன் புதூர் ஜங்ஷன் பகுதியில் பல் மருத்துவமனை அமைத்து மருத்துவ சேவை ஆற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button