“போதை பொருள்கள் இல்லாத தமிழ்நாடுவிழிப்புணர்வு பேரணி”

மூன்றாம் நாள்: செப்டம்பர் 28, 2025 (ஞாயிறுக் கிழமை)

“போதை பொருள்கள் இல்லாத தமிழ்நாடு
விழிப்புணர்வு பேரணி”
பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளியில் நாட்டு நலப்பணித்திட்டம் சார்பில் 26.09.2025 முதல் 02.10.2025 வரை 7 நாள் சிறப்பு முகாம் மு.வாகைக்குளம் கிராமத்தில் நடைபெற்று வருகின்றது. மூன்றாம் நாள் நிகழ்வான இன்று 28.09.2025 “போதை பொருள்கள் இல்லாத தமிழ்நாடு – விழிப்புணர்வு பேரணி” நடைபெற்றது. இதில் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி நாட்டுநலப்பணித்திட்ட மாணவர்கள் மற்றும் அரசு மேல்நிலைப்பள்ளி நாட்டுநலப்பணித்திட்ட மாணவர்கள் இனைந்து மாபெரும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
இந்த பேரணிக்கு முதுகுளத்தூர் வருவாய் வட்டாட்சியர் ஏ.என் கோகுல்நாத் தலைமை தாங்கினார். முதுகுளத்தூர் காவல் துணைக்கண்காணிப்பாளர் செ.சண்முகம் , முதுகுளத்தூர் பேரூராட்சி மன்ற தலைவர் அ.ஷாஜஹான் ஆகியோர் கொடியசைத்து பேரணியை துவக்கி வைத்தனர். நாட்டு நலப்பணித் திட்ட மாவட்ட தொடர்பு அலுவலர் நீ.மங்களநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பேரணியானது காந்தி சிலையிலிருந்து நகரின் முக்கிய வீதிகளின் வழியாக சென்று பேருந்து நிலையத்தை வந்து அடைந்தது பின்னர் போதை பொருள் இல்லாத தமிழ்நாடு என்னும் இலக்கு அடைய அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். அதன் பின்னர் நாட்டுநலப்பணித்திட்ட மாவட்ட தொடர்பு அலுவலர் தலைமையில் மாபெரும் போதை பொருள்கள் இல்லாத தமிழ்நாடு என்னும் தலைப்பின் கீழ் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.
இந்நிகழ்வில் நாட்டுநலப்பணித்திட்ட மாணவர்கள் அனைவரும் துண்டு பிரசுரங்கள் விநியோகித்தும் மற்றும் போதைப்பொருளை எதிரான பதாகைகள் ஏந்தியவாறு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இந்த நிகழ்வில் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் கண்ணன் , உடற்கல்வி ஆசிரியர் தமிமுன் அன்சாரி மற்றும் ஏராளமான பொதுமக்கள், ஆசிரியர்கள், வணிகர்கள், முக்கியஸ்தர்கள், காவலர்கள், இளைஞர்கள், பத்திரிக்கையாளர்கள் கலந்து கொண்டனர். இந்த விழாவிற்க்கான ஏற்பாடுகளை பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் நூருல் அமீன் அரசு மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் தர்மராஜ் செய்திருந்தார்கள் அதன்பிறகு நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் உழவார பணிகளில் ஈடுபட்டனர்.







