இராமநாதபுரம்முதுகுளத்தூர்
சாலை மறியல்

சாலை மறியல்

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே, பள்ளி முடிந்து திரும்பிய 12ஆம் வகுப்பு மாணவிகள் இருவர் மீது டிராக்டர் மோதியதில் ஒருவருக்கு கால் முறிவும், மற்றொருவருக்கு பலத்த காயமும் ஏற்பட்டது. காயமடைந்தோர் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனிடையே, டிராக்டர் ஓட்டுநரை கைது செய்யக் கோரியும், மதுக்கடையை அகற்றக் கோரியும் நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவியர் மற்றும் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தைக்குப் பிறகு போராட்டம் கைவிடப்பட்டது.




